NIA Raids in Tamil Nadu : தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை.. அதிகாலையில் பரபரப்பு

NIA Raids in Tamil Nadu : ராமலிங்கம் அந்த பகுதியில் மதமாற்றத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Aug 1, 2024 - 17:02
Aug 2, 2024 - 10:19
 0

NIA Raids in Tamil Nadu : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க முன்னாள் நகர செயலாளரான இவர் இந்து முன்னணி பிரமுகராகவும் இருந்து வந்தார். மேலும் அப்பகுதியில் பாத்திரக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி ராமலிங்கம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ராமலிங்கம் அந்த பகுதியில் மதமாற்றத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ராமலிங்கம் படுகொலை வழக்கில் முதற்கட்டமாக முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கில் தீவிர விசாரணை நடத்திய என்ஐஏ அமைப்பு, மேலும் 8 பேரை அதிரடியாக கைது செய்தது. 

இந்த வழக்கில் தொடர்ந்து தலைமைறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது. இந்நிலையில், ராமலிங்கம் படுகொலை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டின் 25 இடங்களில் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow