CM Stalin : உதயநிதி இன்னும் பழுக்கவில்லை.. கருணாநிதி பாணியில் ரைமிங் ஆக பதில் சொன்ன ஸ்டாலின்

CM Stalin About Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டும் என சமீப காலமாக பல அமைச்சர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Aug 5, 2024 - 13:01
Aug 6, 2024 - 10:09
 0
CM Stalin : உதயநிதி இன்னும் பழுக்கவில்லை.. கருணாநிதி பாணியில் ரைமிங் ஆக பதில் சொன்ன ஸ்டாலின்
Udayanidhi and CM MK Stalin

CM Stalin About Udhayanidhi Stalin as Deputy CM : உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யாருமே எதிர்பாராத பதிலை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அமெரிக்கா செல்வமற்கு முன்பு கட்சிப்பொறுப்பையும் ஆட்சிப்பொறுப்பையும் உதயநிதி வசம் விட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்விஸ்ட் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்(CM Stalin Press Meet), தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.சென்னையில் தற்போது எங்கும் மழைநீர் தேங்கவில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா? என்ற கேள்வி முதலமைச்சரிடம் வைக்கப்பட்டது.அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என்று கூறினார். முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசும் போதும் பதிலளிக்கும் போதும் ரைமிங்காக டைமிங்கில் பதில் கொடுப்பார். அதே பாணியில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் செய்தியாளர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. அப்போது பதில் சொன்ன ஸ்டாலின் என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 

உதயநிதி(Udhayanidhi Stalin) எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உடன் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. பல அமைச்சர்களும் உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வருக்கு யாருக்கு எப்போது என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று தெரியும் அவரை தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கூறினார். அடுத்த சில மாதங்களிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. 

முதல்வர் ஸ்டாலின்(CM Stalin) விரைவில் அமெரிக்காவிற்கு செல்லப்போவதால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. கடந்த மாதம் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொன்ன கையோடு, எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான் என்று சூசகமாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow