Vijay Antony: மழை பிடிக்காத மனிதன் பட சர்ச்சை… ‘அது நான் இல்லை..’ விஜய் ஆண்டனி ஓபன்!

Actor Vijay Antony Mazhai Pidikatha Manithan Movie Controversy : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தில் தனது அனுமதி இல்லாமல் ஒரு நிமிட காட்சி இடம்பெற்றுள்ளதாக, இயக்குநர் விஜய் மில்டன் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

Aug 5, 2024 - 12:46
Aug 6, 2024 - 10:09
 0
Vijay Antony: மழை பிடிக்காத மனிதன் பட சர்ச்சை… ‘அது நான் இல்லை..’ விஜய் ஆண்டனி ஓபன்!
Actor Vijay Antony Mazhai Pidikatha Manithan Movie Controversy

Mazhai Pidikatha Manithan Movie Controversy : விஜய் ஆண்டனி(Vijay Antony) ஹீரோவாக நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. விஜய் மில்டன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேநேரம் படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

மழை பிடிக்காத மனிதன்(Mazhai Pidikatha Manithan) திரைப்படம் வெளியான அன்று இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார் இயக்குநர் விஜய் மில்டன்(Vijay Milton). அதில், இப்படத்தில் விஜய் ஆண்டனியின் கேரக்டரை ரொம்ப சர்ப்ரைஸ்ஸாக உருவாக்கியுள்ளேன். படம் தொடங்கியதும் விஜய் ஆண்டனி யார், அவருக்கு ஏன் அடிப்பட்டுள்ளது என்பதையெல்லாம் சஸ்பென்ஸாக வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றேன். ஆனால், தற்போது வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தின் முதலில் வரும் ஒரு நிமிட காட்சியை நான் எடுக்கவே இல்லை. 

அது எனது அனுமதி இல்லாமலும் எனக்கே தெரியாமலும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அந்த ஒரு நிமிட காட்சியில், விஜய் ஆண்டனியின்(Vijay Antony) கேரக்டர் பற்றிய அனைத்து சர்ப்ரைஸ்களையும் ரசிகர்களுக்கு கூறிவிடுவதாக உள்ளது. இதனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இருக்காது எனக் கூறியிருந்தார். விஜய் மில்டன் வெளியிட்ட இந்த வீடியோ திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இதற்கு காரணம் விஜய் ஆண்டனி தான் என்றும் செய்திகள் வெளியாகின.

இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர், எடிட்டர் என எல்லா பக்கமும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கும் போதும், கதை, திரைக்கதை, எடிட்டிங் ஆகியவற்றில் அவரது தலையீடு இருப்பதாக ஏற்கனவே சில பஞ்சாயத்துகள் வந்துள்ளன. அதனால், மழை பிடிக்காத மனிதன் பட விவகாரத்திலும் விஜய் ஆண்டனி தான் ஏதோ சம்பம் செய்திருக்கலாம் என சொல்லப்பட்டது. 

மேலும் படிக்க - இளையராஜாவிடம் சரண்டர் ஆன மஞ்சும்மல் பாய்ஸ்

அதேநேரம், மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்த விஜய் மில்டன், மழை பிடிக்காத மனிதன் படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டுள்ளது. எல்லாமே படத்தின் நலன் கருதி தன் நடந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் தலையீட்டு இதனை தீர்த்து வைத்த சரத்குமார் சாருக்கு நன்றி என பேசியிருந்தார். அப்படியிருந்தும் தொடர்ந்து விஜய் ஆண்டனி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தன. இதனையடுத்து அவரும் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

அதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர்,“மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக் காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்துவிட்டதாக, என் நண்பர் படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை” என பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்னொரு ட்வீட் போட்டுள்ள விஜய் ஆண்டனி, “மழை பிடிக்காத மனிதன் படத்தில் வரும் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும் இயக்குநரும் கலந்துபேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்துவிட்டனர். இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மழை பிடிக்காத மனிதன் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இயக்குநர் விஜய் மில்டனும் ட்வீட் போட்டு விஜய் ஆண்டனிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow