சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Mar 23, 2025 - 07:48
 0
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

சர்வதேச சுற்றுத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பணிகள் வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்  சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை காண்பதற்காகவும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடவும் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், வார விடுமுறையான இன்று ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தை காண அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் பெரும் திரளாக கடற்கரையில் திரண்டனர். மழை சூழ்ந்து மேகமூட்டம் இருந்தாலும் சூரியன் உதிப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதிப்பதை சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து கடலில் புனித நீராடிய சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனமும் செய்தனர். இதைத்தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை காண்பதற்காக படகில் செல்ல காலை முதலே பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு செல்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow