TATA IPL 2025: நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு.. ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’ அறிமுகம்!

சென்னை காவல் துறையின் சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு‘‘ என்ற நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Mar 23, 2025 - 08:05
 0
TATA IPL 2025:  நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு.. ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’  அறிமுகம்!
TATA IPL 2025: நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு.. ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’ அறிமுகம்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நேற்று கொல்கத்தாவிலுள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இந்த தொடரின் 3வது லீக் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று (மார்.23) ஆம் தேதி நடைபெறுகிறது.

சிஎஸ்கே போட்டிகள்

சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் TATA IPL Season - 2025 கிரிக்கெட் போட்டிகள் 23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. பெருந்திரளான விளையாட்டு ரசிகர்கள், பொதுமக்கள் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கு வருகை தர உள்ளனர். 
 

பாதுகாப்பு நடவடிக்கை

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காணவரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை காவல் ஆணையாளர்  உத்தரவின்பேரில், உயரதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் இப்போட்டிகளை நேரில் காண வரும் கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி செல்வதற்கும், போட்டிகளை காண்பதற்கும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடவாமல் தடுப்பதற்கும், காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் ஆளிநர்கள் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சிங்கம் IPL QR குறியீடு

மேலும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 23.03.2025 அன்று முதல் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு‘‘ என்ற நவீன வசதி சென்னை பெருநகர காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை காவல்துறை

இந்த வசதி மூலம் பொதுமக்கள் கிரிக்கெட் போட்டியை காணவரும்போது, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த QR குறியீடு மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை உடனடியாக பிரச்சனைகளுக்கு தீர்வு நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, சென்னை சிங்கம் IPL QR குறியீடு வசதியை பொதுமக்கள் தங்களின் அவசர காவல் உதவிகளுக்கு பயன்படுத்தி சென்னை பெருநகர காவல்துறையின் உதவிகளை பெறலாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read More:

TATA IPL 2025: முதல் வெற்றியை பதிவு செய்த RCB.. 7 விக்கெட் வித்தியாசத்தில் KKR- ஐ வீழ்த்தியது!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow