Anbumani Ramadoss : பட்டியலின சமுதாயத்தை சார்ந்தவரை முதல்வராக ஆக்குவோம் - அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss About Scheduled Caste Chief Minister : தமிழ்நாட்டில் பட்டியலின சமூதாயம் பாமகவிற்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Anbumani Ramadoss About Scheduled Caste Chief Minister : திண்டிவனம் அருகேயுள்ள கீழ்சிவிரி கிராமத்தில் 78ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். கீழ்சிவிரி கிராமம் அருகே பிரம்மதேசத்தில் செயல்படும் மதுகடைக்கு மூடுவதற்கும், மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் கீழ் சிவிறி கிராமம் இணைக்கப்பட்டுள்ளதை திண்டிவனம் தாலுக்காவுடன் இணைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றபட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் இளைஞர்கள், பெரியவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள். தமிழ் சமுதாயத்தினர் மதுவிற்கு அடிமையாகிவிட்டதால், படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுவில் வருகின்ற வருமானத்தை வைத்து தான் ஆட்சி நடத்துகிற நிலை தான் உள்ளது. கஞ்சா போதை பொருள் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது. தமிழகத்தில் இன்றைய சூழலில் மூன்று தலைமுறைகள் மதுவினால் அடிமையாகியுள்ள நிலையில் இப்போதைய தலைமுறை போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளது.
கஞ்சா போதை பொருட்களை கட்டுபடுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோதே தெரிவித்தேன். மூன்று ஆண்டுகள் கடந்தும் கட்டுபடுத்த நடவடிக்கை இல்லை. சர்வசாதாரணமாக போதை பொருட்கள் அமெரிக்காவில் கிடைப்பது போன்று இங்கு கிடைக்கிறது.
69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பிற்படுத்தபட்ட சமூகத்தினருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு கிடைத்தது. 26 சதவீதம் தான் கிடைக்கும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பஞ்சாயத்து தலைவருக்கு அதிகாரம் இருக்கும் போது, முதலமைச்சருக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சருக்கும் அதிகாரம் இருக்கும் போது இவருக்கு இல்லை என பொய் கூறி கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பட்டியலின சமூதாயம் பாமகவிற்கு ஆதரவு கொடுத்தால், பட்டியலின சமுதாயத்தை முதலமைச்சராக ஆக்குவோம். பட்டியலின சமுதாயத்தினை சார்ந்தவர்கள் 1998ஆம் ஆண்டிலையே மத்திய அமைச்சராக்கியது பாமகதான் என்றும் திமுக 1999இல் தான் பட்டியலின சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்கள்” என்றார்.
What's Your Reaction?