திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படி தான் நடக்கும்- அப்பாவு உறுதி

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இப்படி தான் நடக்கும் என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Jan 6, 2025 - 12:27
 0
திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படி தான் நடக்கும்- அப்பாவு உறுதி
ஆர்.என்.ரவி-அப்பாவு

2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜன 6) காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில் பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து, சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி யாரும் எதிர்பாராத விதமாக பேரவையை விட்டு திடீரென வெளியேறினார். அதாவது, பேரவை தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பிறகு  சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு வரும் 11-ஆம் தேதி  சனிக்கிழமை வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சபையில் அண்ணா பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என் ரவி பேச ஆரம்பிக்கும் போது அதிமுகவினர் அமலில் ஈடுபட்டனர். பலமுறை எச்சரித்தும் அதிமுகவினர் தொடர் அமலியில் ஈடுபட்டனர். 

அதன் காரணமாகவே அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். ஆளுநர் ஜனநாயக கடமையை ஆற்றியிருக்க வேண்டும். பேரவையில் கருத்து கூற பேரவை உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. வேண்டும் என்றே உரையை புறக்கணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு செயல்படுகிறாரா? என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஆளுநருக்கு அழைப்பு விடுக்கும் போது எந்தவித பிரச்சனையும் இல்லை. முறையாக எங்களுக்கு ஆளுநர் மாளிகையில் மரியாதை வழங்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவது நியாயம் இல்லை.  தமிழ்நாட்டில் எப்போதும் சட்டபேரவை இப்படித்தான் நடக்கும்.

நாங்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படித்தான் நடக்கும்.  இந்தியா மதசார்பற்ற நாட்டை மத சார்புள்ள நாடு என்று ஆளுநர்தான் கூறுகிறார். ஆளுநர் உரையின் போது நேரலை செய்யப்படவில்லை என்ற செய்தி எனக்கு தெரியாது. தொழில்நுட்ப கோளாறாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னவென்று நான் பார்த்த பிறகு கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow