Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23 - சுக்கிரன் அருள் யாருக்கு தேடி வரும்?

Today Horoscope Predictions in Tamil: சுக்கிரபகவானின் அருள் நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் சந்திரன் மீன ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 23, 2024 - 06:32
Aug 24, 2024 - 10:01
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23 - சுக்கிரன் அருள் யாருக்கு தேடி வரும்?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 07ஆம் நாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதி பகல்  10.39 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 07.54 மணி வரை அதன் பின் அஸ்வினி நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும்.  விரைய செலவு ஏற்படும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

ரிஷபம்

இன்றைய தினம் உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க இல்லாட்டி கடன் வாங்க வேண்டியிருக்கும்.

மிதுனம்

இன்றைய தினம் உங்களுடைய வேலையை உற்சாகமாக செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வருமானம் வரும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

கடகம்

உங்களுடைய குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் உண்டாகும். உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும்.

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் கவனமாக இருப்பது அவசியம். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகளை தேடி தருவார். காரணம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். நண்பர்களினால் உதவி கிடைக்கும்.

துலாம்

சந்திரன் பயணத்தால் உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கடன் வாங்க வேண்டாம் கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்

சந்திரன்  பயணத்தினால் உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். உங்களுக்கு பணம் வரவு வரும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உணவு விசயத்தில் கவனம் தேவை.

தனுசு

சந்திரன் பயணத்தால் இன்றைக்கு உங்களுக்கு சுகமான நாள் என்றாலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.  பணவருமானம் இன்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள். உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும் அதேபோல செலவுகளும் இருக்கும். வீட்டில் வீண் பேச்சுக்கள் வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கும்பம்

இன்றைய தினம் உங்க ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மந்தமான நாளாக இருக்கும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வேலையில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள்.

மீனம்

சந்திரன் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்றைய தினம் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் பெருமை சேரும் உற்சாகம் கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow