Gold Rate Today : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இப்போது முதலீடு செய்யலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?

Gold Rate Today in Chennai : மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீது சுங்க வரி குறைக்கப்பட்டதை அடுத்து தினசரியும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 15 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 4000 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6400க்கும், சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 51,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Aug 6, 2024 - 10:56
Aug 6, 2024 - 12:50
 0
Gold Rate Today : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இப்போது முதலீடு செய்யலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
Gold Rate Today in Chennai

Gold Rate Today in Chennai : மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீது சுங்க வரி குறைக்கப்பட்டதை அடுத்து தினசரியும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 15 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 4000 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6400க்கும், சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 51,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சில நாட்கள் குறைவதும் சில நாட்கள் அதிகரிப்பதுமாகவும் உள்ளது. தற்போது தங்கத்தின் குறையத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இது வெறும் தற்காலிக விலை குறைவா இல்லை இனி தொடர்ந்து குறையுமா? என்பதே மக்களின் சந்தேகம். இதனால் இப்போதே தங்கத்தை வாங்க வேண்டுமா.. இல்லை கொஞ்சக் காலம் காத்திருக்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். 

இதற்கிடையே இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்கள் வட்டியை உயர்த்தவும் இல்லை.. குறைக்கவும் இல்லை.. அதே நிலையில் வட்டி தொடரும் என அறிவித்துள்ளனர். மேலும், மார்க்கெட் தாங்கள் நினைத்த திசையில் தான் செல்வதாகவும் விரைவில் விலைவாசியும் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்குக் குறையும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

நேற்று ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.20 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.இப்போது எங்கள் கவலை விலைவாசி இல்லை. வேலைவாய்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதையே கண்காணிக்க இருக்கிறோம். அதைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் வட்டி விகிதத்தைக் குறைக்கப் போவதாக அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவே முக்கியமான மேட்டர். 

அமெரிக்காவில் செப்டம்பர் 2ஆவது வாரம் அடுத்த மீட்டிங் நடைபெற இருக்கிறது. அதுவரை இதே டிரெண்ட் இருந்தால் அந்த கூட்டத்தில் 0.25% வட்டியைக் குறைப்பார்கள். அதுவரை இதே டிரெண்ட் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். இதனால் முதல் வட்டி குறைப்பு செப்டம்பர் மாதம் வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடுத்து நவம்பர் மாதம் நடக்கும் கூட்டத்தில் வட்டியை அப்படியே வைத்திருப்பார்கள். குறைக்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது.அங்கு வட்டி விகிதம் குறைக்கத் தொடங்கினால் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வென்றால் தங்கமும் அதிகரிக்கும் என்கிறார் ஆனந்த் சீனிவாசன். 

இந்த நிலையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 57 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5243 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.456 குறைந்து ஒரு சவரன் ரூ.41,944க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.4 குறைந்து ஒரு கிராம் 87.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 87,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow