Bangladesh Violence : வங்கதேசத்தில் இந்து கோயில்களுக்கு தீ வைப்பு.. பாதுகாக்கும் இஸ்லாமியர்கள்!

Hindu Temples Set Fire in Bangladesh Violence : வங்கதேச முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியை சேர்ந்த மஷ்ரஃப் மோர்டாசா, குல்னா பிரிவு பகுதியில் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

Aug 6, 2024 - 11:09
Aug 6, 2024 - 12:53
 0
Bangladesh Violence : வங்கதேசத்தில் இந்து கோயில்களுக்கு தீ வைப்பு..  பாதுகாக்கும் இஸ்லாமியர்கள்!
Hindu Temples Set Fire in Bangladesh Violence

Hindu Temples Set Fire in Bangladesh Violence : வங்கதேச நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும். திறமையின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. 

இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்த, அவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர்.இந்த மோதலில்  200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். 

கடந்த 2 நாட்களாக வங்கதேசம் முழுவதும் வன்முறை அதிதீவிரமாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகத்தை சூறையாடி கையில் கிடைத்த பொருட்களை அள்ளிச் சென்றனர். 

மேலும் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீ  வைத்து வருகின்றனர். இதேபோல் வங்கதேசத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு ஒருபிரிவு போராட்டக்காரர்கள் தீ வைத்து வருகின்றனர். அங்குள்ள இஸ்கான் கோயில், காளி கோயில்களுக்கு நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் தீ  வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஒரு சில இடங்களில் இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பிரிவினர் இந்து கோயில்களுக்கு தீ வைத்து வரும் நிலையில், அங்குள்ள இஸ்லாமியர்கள் இந்து கோயில்களுக்கு தீ வைக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏராளமான மாணவர்கள் வங்கதேசத்தில் உள்ள பிரபலமான இந்து கோயில்கள் முன்பு அமர்ந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த விடாமல் பாதுகாத்து வரும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இது தவிர வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக வதந்தி பரவியது. ஆனால் போராட்டக்காரர்கள் உண்மையில் வங்கதேச முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைத்து எரித்தது தெரியவந்தது. ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியை சேர்ந்த மஷ்ரஃப் மோர்டாசா, குல்னா பிரிவு பகுதியில் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவதை அறிந்ததும் மஷ்ரஃப் மோர்டாசா தனது குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். இவர் வங்கதேச அணிக்காக 300 சர்வதேச போட்டிகளில் விளையாடி 12,000 ரன்கள் அடித்துள்ளார். 290 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை நீடித்து வருவதால் இந்தியாவில் வங்கதேச எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow