அது வேறு.. இது வேறு.. முடிச்சு போடாதீங்க..அதிமுகவை அழைத்த திருமாவளவன் விளக்கம்!

தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது எல்லோரும் இருக்கிற மது ஒழிப்பு மாநாடு கூட்டணியில் இருந்தாலும் பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடும் அதன்படி அதிமுக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Sep 11, 2024 - 14:53
 0
அது வேறு.. இது வேறு.. முடிச்சு போடாதீங்க..அதிமுகவை அழைத்த திருமாவளவன் விளக்கம்!
Tirumavalavan edappadi palanisamy

மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே இது 2026 வது ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி இல்லை அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தொல். திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போது மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று அங்குள்ள கோரிக்கை வைத்தனர்.ஆகவே தான் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது.

மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல். தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும்.மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் எல்லாம் கட்சிகளும் வரலாம்  இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் கூறியிருந்தார். இந்த அழைப்பு ஊடகங்களில் பேசு பொருளானது. திருமாவளவன்  வேறு கூட்டணிக்கு மாறப்போகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. 

இந்த நிலையில் இது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதில் மணி மண்டபம் அமைக்க அரசானை வெளியிடப்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

மதுவை போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருவதாகவும், பெளத்தத்தை தழுவியர்களில் 22 கொள்கைகளில் மதுவை தொட கூடாது என்பது ஒன்று மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். கட்சி அரசியல் என்பது வேறு சமுகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு... மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும்.மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளது. 

திமுகவிற்கும், அதிமுகவிற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர இயலாது? இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். 

மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே இது 2026 வது ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி இல்லை அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைப்பதாகவும் அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம் எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும் 

கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது. பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது. பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது. போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு.சாதாரண மக்கள் சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புவதாகவும் கூறினார்.,

தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம். இது எல்லோரும் இருக்கிற மது ஒழிப்பு மாநாடு.கூட்டணியில் இருந்தால் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடும் அதன்படி அதிமுக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம். பாஜகவும் பாமகவும் விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை அவர்கள் மதவாத சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow