செல்போனால் வந்த வினை... இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை
சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

எடப்பாடி அரசு மருத்துவமனையில் நவீன முறையில் சிகிச்சை செய்து ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களை பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மகன் திலகர் (இரண்டரை வயது) இந்த சிறுவனுக்கு கடும் காய்ச்சல் பாதிப்பால் கடந்த 14ஆம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் கையில் செல்போனை வைத்து வீடியோ பார்த்துக் கொண்டிருந்த பொழுது செல்போனில் வைக்கப்பட்டிருந்த 5 ரூபாய் நாணயம் கீழே விழுந்துள்ளது.அதனை எடுத்து விழுங்கி உள்ளான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த சிறுவனுக்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கொண்ட குழுவினர் உடனடியாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் நவீன முறையில் சிகிச்சை செய்து சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.
சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.
இக்காலத்தில் எவ்வளவு அதிநவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்த போதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிட்டு தங்களது பணிகளை கவனிக்க செல்லாமல், குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே அனைவருக்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
Read more :சென்னையில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் விசாரணை
What's Your Reaction?






