கரூர் தென் திருப்பதியில் மாசி மாத தெப்பத்திருவிழா.. பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு..!
கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வழிப்பட்டனர்.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத
தெப்பத் திருவிழா மிகவும் விமர்சியையாக நடைபெற்றது.
கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
வண்ண விளக்குகளாளும், மலர்களாலும் அலங்கரிக்கபட்ட தெப்பத்தில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கல்யாணவெங்கட்ரமணர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்,நீர் நிரம்பிய குளத்தில் தெப்பத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் தெப்பத்திள் கையிருகளை பிடித்து இழுத்தனர். தெப்பம் குளத்தில் மிதந்தவாறு, குளத்தின் நான்கு திசைகளிலும் மிதந்தவாறு வலம் வந்தது.
சிறப்பாக நடைபெற்று வரும் மாசி மாத தெப்பத்திருவிழா நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்களிலிருந்து ஏராளமான ஆன்மீகப் பெருமக்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தான்தோன்றி மலை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
What's Your Reaction?






