மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Feb 18, 2025 - 11:37
Feb 18, 2025 - 11:39
 0
மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான 10 ஆண்டுகள் ஆட்சியை வீழ்த்தி கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தது. 2021-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளான மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி உள்ளது.

ஆளும் கட்சியான திமுக அரசு, ஆட்சி பொறுபேற்று மூன்று முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால்  திமுக அரசு தனது கடைசி முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அதனால், இதுவே திமுகவின் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். 

மேலும் படிக்க: மார்ச் 15-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து, 2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் நிதிச்சுமை இருக்கும் வேளையில் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காததால் இந்த பட்ஜெட் தமிழ்நாடு அரசிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow