ரஜினிகாந்துக்கு 70 வயசா!.. வாயை பிளந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

Oct 18, 2024 - 01:35
Oct 18, 2024 - 02:10
 0
ரஜினிகாந்துக்கு 70 வயசா!.. வாயை பிளந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்
ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியம்

கும்பகோணத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்த்து பரவசமடைந்தனர். ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஆச்சரியமடைந்த அவர்கள், இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக கூறி புருவத்தை உயர்த்தினர்.

தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், மல்லுவுட் ஹீரோ ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் 10ம் தேதி வெளியாகியது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம், அதிக எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. ரஜினி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதால், வேட்டையனில் ஆக்ஷன் தெறிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ரிலீஸான வேட்டையன் படத்துக்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படத்தின் பல காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் சம்பவம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒருசில சீன்ஸ் தவிர மற்ற இடங்களில் ரஜினியின் கூஸ்பம்ஸ் சாகசங்கள் இல்லை எனவும், ஆக்ஷன் காட்சிகளில் தலைவர் அதிகம் ரிஸ்க் எடுக்காமல் நடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மூன்று திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் சுற்றுலா வழிகாட்டியிடம் ரஜினிகாந்தின் வேட்டையின் திரைப்படத்தை காண விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள கார்த்திக் சினிமாஸ் திரையரங்கில் மதியம் 2.30 மணி காட்சிக்கு சுற்றுலா வழிகாட்டி அழைத்து வந்துள்ளார். திரைப்படம் முடிந்து உற்சாகத்துடன் சத்தமிட்டபடி வெளியே வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளை ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ஊழியர்கள் சால்வை அணிவித்தனர்.

அப்போது பேட்டியளித்த ஜெர்மன் நாட்டு பெண் சுற்றுலா பயணி, ரஜினிகாந்த்துக்கு 70 வயதா என கேட்டு ஆச்சரியமடைந்தார். இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக கூறிய அவர், திரையரங்கில் ரஜினி படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் ஆனால், சவுண்ட் அதிகமாகவும் இருந்தாகவும் கூறி ரஜினியின் ஸ்டைலை செய்து உற்சாகமடைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow