வாழ்த்துக்கள் கீர் ஸ்டார்மர்.. நன்றி ரிஷி சுனக்.. பிரிட்டன் தேர்தல் முடிவுகளுக்கு மோடி ட்வீட்

இங்கிலாந்து தேர்தலில் வெற்றிபெற்ற கீர் ஸ்டார்மருக்கு தனது வாழ்த்துகளையும், தோல்வியடைந்த ரிஷி சுனக்குக்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.கீர் ஸ்டார்மருக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் கூட்டாண்மையை வலுப்படுத்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Jul 5, 2024 - 18:20
Jul 8, 2024 - 13:08
 0
வாழ்த்துக்கள் கீர்  ஸ்டார்மர்.. நன்றி ரிஷி சுனக்.. பிரிட்டன் தேர்தல் முடிவுகளுக்கு மோடி ட்வீட்
PM Modi Thanks To Rishi Sunak

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பழமை வாத கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.இந்தத் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிருஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் பழமை வாத கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளைக் கொண்ட பிரிட்டனில் மொத்தம் 650 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 326 தொகுதிகளைப் பெறக்கூடிய கட்சி ஆட்சியை அமைக்கும். இதில் தொடக்கம் முதலே கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. கீர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சி 400 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின் பழமைவாத கட்சி 92 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. 

தொழிலளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கீர் ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பிரிட்டனின் ஆட்சியை பிடிக்கிறது.

பிரதமர் மோடி, கீர் ஸ்டாமருக்கு தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், இங்கிலாந்து பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற கீர் ஸ்டாமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் கூட்டாண்மையை வலுப்படுத்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


அதேபோன்று, ரிஷி சுனக்கிற்கு நன்றி கூறியுள்ளார் பிரதமர் மோடி, இங்கிலாந்து நாட்டின் போற்றத்தக்க தலைமைத்துவவாதியாக இருந்த ரிஷி சுனக்கிற்கு நன்றி, உங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்த, உங்களின் தீவிர பங்களிப்புக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow