இந்திய அஞ்சல் துறையின் GDS முடிவுகள் 2024 வெளியானது!

இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் வெளியாகியுள்ளது.

Aug 20, 2024 - 16:18
Aug 21, 2024 - 10:15
 0
இந்திய அஞ்சல் துறையின் GDS முடிவுகள் 2024 வெளியானது!
இந்திய அஞ்சல் துறையின் GDS முடிவுகள் 2024

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை 15ம் தேதி வெளியானது. இதையடுத்து அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அஞ்சல் துறை ளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பதவிகளுக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 10ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடம் கொண்டு படித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 3,789 காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாட்டில் உள்ள 3,789 காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவில் 1,794, ஒபிசி பிரிவ்ல் 861, எஸ்சி பிரிவில் 621, எஸ்டி பிரிவில் 37, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 358, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 118 என்ற வகையில் நிரப்பப்படுகிறது. கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வயது வரம்பு சலுகையும் உள்ளது. 

GDS முடிவுகள் 2024:

இந்நிலையில், கிராமின் டக் சேவக் (GDS) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிக்களுக்கான முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஆந்திர பிரதேசம், அசாம், டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதர மாநிலங்களின் முடிவுகள் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மற்றும் இமெயில் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

முடிவுகளை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? 

1. முதலில் இந்திய அஞ்சல் துறை GDS-இன் அங்கீகரிக்கப்பட்ட https://indiapostgdsonline.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும். 

2. பின்பு Shortlist candidates 2024 என்ற பிரிவில், நீங்கள் எந்த மாநிலமோ அந்த மாநிலத்தை கிளிக் செய்யவும். 

3. அதனைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். இதில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். 

மேலும் படிக்க: குரங்கம்மை புதிய திரிபு.... விமான நிலையங்களில் தீவிர சோதனை!

உங்களது பெயர் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அடுத்தக்கட்டமாக நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். இதுகுறித்த விவங்கள் உங்களுக்கு SMS அல்லது இமெயில் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதையடுத்து உங்களுக்கு மெடிக்கல் செக் அப்பும் செய்யப்படும். இதில் உங்களுக்கு எழுத்துத்தேர்வோ அல்லது நேர்காணலோ கிடையாது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow