தென்காசி மாவட்டத்தில் 144 தடை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. என்ன காரணம்?

தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வரும் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 19, 2024 - 13:02
 0
தென்காசி மாவட்டத்தில் 144 தடை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. என்ன காரணம்?
tenkasi 144

தென்காசி: தென்காசி மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட்18 முதல் ஆகஸ்ட் 21 வரையும், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரையும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் 309வது பிறந்தநாள் நிகழ்ச்சி, ஒண்டிவீரன் 253வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் பிறந்தநாள்,ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணி முதல் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல் வரும் 30ஆம் தேதி  மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள்,  தென்காசி மாவட்டம் முழுமைக்கும், (18.08.2024 ) இன்று மாலை 6.00 மணி முதல் 21.08.2024 காலை 10.00 மணி வரையும் அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து வருகிற  30.08.2024 மாலை 6.00 மணி முதல்  செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி  காலை 10.00 மணிவரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டம் பிரிவு 163 (1) மற்றும் (2) தடையுத்தரவு அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. . இந்த நேரத்தில் அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு  மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பின்படி 4 பேருக்கு மேல் நின்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow