Vettaiyan VS Kanguva: ஒரேநாளில் வெளியாகும் வேட்டையன்–கங்குவா... பாக்ஸ் ஆபிஸ் கிங் ரஜினியா, சூர்யாவா?
சூர்யாவின் கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸாகவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன் மட்டுமே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தன. ரஜினியின் லால் சலாம், கமலின் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. இதனால் அடுத்தடுத்து வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த வாரம் வெளியான தங்கலான், கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் 10ம் தேதி ரஜினியின் வேட்டையன் படமும், சூர்யா நடித்துள்ள கங்குவாவும் ரிலீஸாகவுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ளது. பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் பல மொழிகளில் வெளியாகிறது. சூர்யாவின் கேரியரில் இதுவரை இப்படியொரு படமே வந்தது கிடையாது என சொல்லும் அளவிற்கு கங்குவாவை இயக்கியுள்ளாராம் சிவா. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் தோல்வியடைந்தது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். இதனையடுத்து தரமான கம்பேக் கொடுக்கும் வேண்டும் என சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கியுள்ளாராம் சிவா.
அதேநேரம் அண்ணாத்த தோல்வியில் இருந்து ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஆனால் மீண்டும் லால் சலாம் படத்தின் தோல்வியால் ரஜினி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு அடுத்து வரவிருக்கும் வேட்டையன் சூப்பர் ஸ்டாரின் மாஸ் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் தசெ ஞானவேல். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் ரஜினியின் கேரியரில் கிளாஸிக்கல் ஹிட் அடிக்குமா என கோலிவுட்டே எதிர்பார்த்துள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் பாசில், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க - “விஜய் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்..” கோட் பிரபலம் அதிரடி!
ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடித்துள்ள வேட்டையன், அவரது ஜெயிலர் திரைப்படம் போல பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. ஆனால், சூர்யாவின் கங்குவாவும் அதே நாளில், அதாவது அக்.10ம் தேதி ரிலீஸாகிறது. இதனால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் வேட்டையன் vs கங்குவா என்ற மோதல் உருவாகியுள்ளது. கங்குவா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதோடு, கிராபிக்ஸ், 3டி என டெக்னிக்கலாகவும் மிரட்டும் எனத் தெரிகிறது. அதேநேரம் வேட்டையன் தரமான கன்டென்ட் பின்னணியில் உருவாகியுள்ளது. ரஜினியுடன் பான் இந்தியா நடிகர்களும் கை கோர்த்துள்ளனர்.
இதனால் வேட்டையன் – கங்குவா என இந்த இரண்டு படங்களுமே கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் வேட்டையன் vs கங்குவா இந்த இரண்டில் எந்த படத்துக்கு தமிழ்நாட்டில் அதிக ஸ்க்ரீன்கள் கிடைக்கும் என்பதும் புரியாத புதிராக உள்ளது. அதேநேரம் கடைசி நேரத்தில் சூர்யாவின் கங்குவா ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக வேட்டையன் ரிலீஸ் தள்ளிப்போகும் என நினைத்து, அக்டோபர் 10ம் தேதியை முடிவு செய்தது படக்குழு. ஆனால், இப்போது வேட்டையன் vs கங்குவா மோதல் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
வேட்டையன் VS கங்குவா #Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 #VettaiyanFromOCT10 #Vettaiyan #Rajinikanth #kanguvavsvettaiyan #kanguva #Tamilcinema #Cinemanews #cinemaupdate @rajinikanth @Suriya_offl @NehaGnanavel @kegvraja @LycaProductions @StudioGreen2 pic.twitter.com/WLCKbnP2qw — KumudamNews (@kumudamNews24x7) August 19, 2024
What's Your Reaction?






