பிறப்புறுப்பு உள்பட 14 இடங்களில் காயம்.. மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

மருத்துவ மாணவியின் மரணம் ஒரு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 19, 2024 - 13:09
 0
பிறப்புறுப்பு உள்பட 14 இடங்களில் காயம்.. மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!
Medical Student Post Mortem Report

டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் படுகொலைக்கு பிறகு ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறை கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடியது, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைத்தது என மேற்கு வங்கமே பதற்றத்தில் உள்ளது. 

மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து முதலில் மேற்கு வங்கம் முழுவதும் நடந்த போராட்டம் பின்பு நாடு முழுவதும் பரவியது. பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு நீதி வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தவிர கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மருத்துவ மாணவியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

* மருத்துவ மாணவியின் தலை, முகம், கழுத்து, கைகள் மற்றும் பிறப்புறுப்பு என உடலின் 14 இடங்களில் காயங்கள் உள்ளன. 

* கொடூரர்கள் மாணவியின் கழுத்தை நெரித்ததால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். 

* மருத்துவ மாணவி மிகவும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

* மாணவியின் பிறப்புறுப்பில் வெள்ளை போன்ற தடித்த, பிசுபிசுப்பு திரவம் காணப்பட்டது.

* மாணவியின் நுரையீரலில் இரத்தக்கசிவு மற்றும் உடலில் இரத்தக் கட்டிகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

* எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை 

* மாணவியின் ரத்த மாதிரிகள் மற்றும் மற்ற உடல் திரவங்களை மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்ய அனுப்பியுள்ளனர்.

மேலும் மருத்துவ மாணவியின் மரணம் ஒரு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. மாணவியின் பிரதே பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, நமது கண்களில் இருந்து தானாக கண்ணீர் கசிந்து விடுகிறது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான செயலை செய்த கயவர்கள் அனைவருக்கும் மிக மிக கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow