RN Ravi Speech : பிரதமரின் இதயத்தில் தமிழ் மக்கள் உயர்ந்த இடத்தில் உள்ளனர்.. வந்தே பாரத் விழாவில் ஆளுநர் ரவி பேச்சு

RN Ravi Speech at Vande Bharat Express Train Inauguration : பிரதமர் நரேந்திர மோடி தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று பறைசாற்றுகிறார். மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Aug 31, 2024 - 14:24
Aug 31, 2024 - 17:13
 0
RN Ravi Speech : பிரதமரின் இதயத்தில் தமிழ் மக்கள் உயர்ந்த இடத்தில் உள்ளனர்.. வந்தே பாரத் விழாவில் ஆளுநர் ரவி பேச்சு
tn governor ravi speech at vande bharat

RN Ravi Speech at Vande Bharat Express Train Inauguration : சென்னை:2047ம் ஆண்டு நாட்டை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு என்று ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி மூலம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு, மீரட் – லக்னோ இடையே 3 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் துவக்க நாளான இன்று சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.  வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பேசிய அவர்,இன்று அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான நாள். தமிழ்நாட்டில்  வந்த பாரத் ரயில் அதிகம். அதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இதயத்தில் தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ்மொழி உயர்ந்த இடத்தில் வகிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று பறைசாற்றுகிறார். மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

2047ம் ஆண்டு நாட்டை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு.   மத்திய அரசின் நிதி மூலம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் இலக்கிற்கு முக்கிய காரணியாக அமையும் என ஆளுநர் தெரிவித்தார்.

சென்னை - நாகர்கோவில் ரயில்புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் பின்னர், நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்பட்டு, இரவு 11 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்தாம்பரம், விழுப்புரம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

16 பெட்டிகளைக் கொண்ட இந்தரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. நாகர்கோவிலுக்கு ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,760-ம்,எக்ஸ்கியூடிவ் கோச்சில் ஒருவருக்கு ரூ.3,240 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில், மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரை வந்தடையும்.

மதுரை – பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் துவக்க நாளான இன்று மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரையில் நடைபெறும் இதன் துவக்க விழாவில், மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.

8 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர்,நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும். ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,575-ம், எக்ஸ்சிகியூடிவ் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.2,865-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow