தமிழ்நாடு

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... கூடுதல் ஏஎஸ்பி நியமனம்... தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக காவல்துறையில் புதிதாக சேர்ந்துள்ள 12 ஏஎஸ்பிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... கூடுதல் ஏஎஸ்பி நியமனம்... தமிழ்நாடு அரசு உத்தரவு!
12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு, ஆம்ஸ்ட்ராங் கொலை போன்ற சம்பவங்களை அடுத்து தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே அரசு உயர் அதிகாரிகள் இடமாற்றம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழக காவல்துறையில் புதிதாக சேர்ந்துள்ள 12 ஏஎஸ்பிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக கேடரான 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி முடித்துவிட்டனர். இதனையடுத்து அவர்கள் தமிழக காவல்துறையில் பணிக்காக சேர்ந்துள்ளனர். அந்த 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி, 
1. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏஎஸ்பியாக அனிகேத் அசோக் பத்தரே மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
2. விழுப்புரம் ஏஎஸ்பியாக ரவீந்திர குமார் குப்தா.
3. நாமக்கல் போலீஸ் ஏஎஸ்பியாக ஆகாஷ் ஜோஷி.
4. மதுரை திருமங்கலம் ஏஎஸ்பியாக அன்சுல் நாகர்.
5. நாகர்கோவில் ஏஎஸ்பியாக லலித்குமார்.
6. தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியாக டாக்டர்.சி.மதன்.
7. அருப்புக்கோட்டை ஏஎஸ்பியாக மதிவாணன்.
8. திருவண்ணாமலை டவுன் ஏஎஸ்பியாக சதீஷ் குமார்.
9. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏஎஸ்பியாக ஸ்ரீஸ்டி சிங்.
10. தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஏஎஸ்பியாக அச்சுமி (இந்த பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.)
11. ஓசூர் ஏஎஸ்பியாக அக்ஷய் அனில் வகாரே.
12. தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியாக இருந்த கேல்கர் சுப்ரமணி பாலசந்திரா, தேனி ஏஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.