அமெரிக்கா போகும் முன்பு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. யார் பதவி பறிப்பு.. யாருக்கு வாய்ப்பு

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் சீனியர் உட்பட 3 அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட உள்ளது. மேலும் 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aug 22, 2024 - 10:31
 0
அமெரிக்கா போகும் முன்பு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. யார் பதவி பறிப்பு.. யாருக்கு வாய்ப்பு
tamil nadu cabinet reshuffle cabinet change

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட இருக்கிறது; இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 சீனியர்களின் அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட உள்ளது. மேலும் 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. அத்துடன் அமைச்சர்களின் துறைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அமெரிக்காவின் 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அமெரிக்கா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்புகிறார்.

முதல்வர் ஸ்டாலின் தமது அமெரிக்கா பயணத்தின் போது தமிழ்நாட்டில் 500 நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கிறது. 

தமிழ்நாடு அமைச்சரவையில் சீனியர் உட்பட மொத்தம் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலாக 3 புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படுகிறதாம். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்கள், திமுக பலவீனமாக உள்ள பகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகின்றனராம். அத்துடன் அமைச்சர்களது பலரது துறைகளும் பெரிய அளவில் மாற்றப்பட இருக்கிறதாம்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து 4வது ஆண்டில் பயணிக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போதைய அமைச்சரவை மாற்றம் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக  நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் தாமதமாவதால் அவர் வரும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பாகவே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது குறிப்பாக திமுக சட்டசபை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow