தமிழ்நாட்டின் 50வது தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்.. யார் இவர்? பின்னணி காரணம் என்ன?

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். யார் இவர்? இவரை தலைமைச் செயலாளராக டிக் அடித்த பின்னணி காரணம் என்ன என்று பார்க்கலாம்.

Aug 19, 2024 - 11:20
Aug 19, 2024 - 11:33
 0
தமிழ்நாட்டின் 50வது தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்.. யார் இவர்? பின்னணி காரணம் என்ன?
muruganandam ias

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முருகானந்தம் ஐஏஎஸ் தலைமை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற முருகானந்தம் தனது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கியுள்ளார். 


தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.

யார் இவர்? இந்த திடீர் மாற்றத்தின் பின்னணி குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்த போது, முருகானந்தம் சென்னைக்காரர்.. ஸ்டாலினின் குட் புக்கில் இருப்பவர். இவர் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் கூட பாராட்டி இருந்தார். முன்பு முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் உதயசந்திரன் இருந்தார்.. உதயசந்திரன் அதன்பின் நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்தனர்.

முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கணினி அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார்.  பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பழனிவேல் தியராஜனின் ரைட் ஹேண்ட் ஆக செயல்பட்டார்.  

கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார் முருகானந்தம். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதித்துறை செயலராக இருந்தார்.தமிழ்நாடு பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் முருகானந்தத்தின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது. 

பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் முருகானந்தம்,2001-04 வரை கோவை ஆட்சியராக பணியாற்றியிருந்தார் முருகானந்தம். கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பு வகித்துள்ளார்.திமுக ஆட்சி அமைந்த பிறகு அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்ற முருகானந்தம் ஐஏஎஸ்  தற்போது  தலைமை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம். தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow