Suryakumar Yadav : அட அதுக்குள்ளேவா?.. விராட் கோலி சாதனையை சமன் செய்த சூப்பர் ஃபார்ம் ‘ஸ்கை’
Suryakumar Yadav World Record : சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் லெஜண்ட் விராட் கோலியின் சாதனையை இந்திய அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

Suryakumar Yadav World Record : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சூர்யகுமார் தலைமையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், 3ஆவது டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களம்புகுந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பு 137 ரன்கள் எடுத்தது. கடந்த 2 போட்டிகளில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்த போட்டியில் கட்டுக்கோப்பாக பந்துவீசியது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மஹீசா தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், வஹிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய இலங்கை அணியினர் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 26 ரன்களும், குசல் மெண்டிஸ் 43 ரன்களும் எடுக்க இலங்கை 15. ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி வெற்றிபெற கடைசி 28 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தது. ஆனால், இந்திய அணியினர் சிறப்பான யுத்தியை கையாண்டனர். 19ஆவது ஓவரை வீசிய ரிங்கு சிங் குசல் பெராரவையும் (46), ரமேஷ் மெண்டிஸையும் (3) வெளியேற்றியதோடு 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசினார். அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால், ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வாஷிங்டன் சுந்தரின் பந்தில் வீழ்ந்தது. முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதனால், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆட்டநாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கும், தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கும் வழங்கப்பட்டது.
இதன் மூலம் அதிக முறை தொடர் நாயகன் விருதுபெற்றவர்கள் பட்டியலில் பாபர் அசாம், டேவிட் வார்னர், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரின் சாதனையை ‘ஸ்கை’ [SKY] என ரசிகர்களால் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் விராட் கோலி 7 [46 தொடர்கள்] முறை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் 5 [20 தொடர்கள்], மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 5 [35 தொடர்கள்], நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் 5 [42 தொடர்கள்], 5ஆவது இடத்தில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 5 [45 தொடர்கள்] ஆகியோர் உள்ளனர்.
அதேபோல், அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை, சூர்யகுமார் யாதவ் சமன் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 16 முறையும் [71 போட்டிகள்], விராட் கோலி 16 முறையும் [71 போட்டிகள்] விருதினை பெற்றுள்ளார்கள். ஜிம்பாப்வேயின் சிகந்தர் ரஸா 15 முறை [91 போட்டிகள்] மூன்றாவது இடத்தில் உள்ளார்.
What's Your Reaction?






