தோனி இல்லாத சி.எஸ்.கே அணி?.. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.. ரசிகர்கள் ஃபீலிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Sep 11, 2024 - 16:06
Sep 11, 2024 - 17:07
 0
தோனி இல்லாத சி.எஸ்.கே அணி?.. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.. ரசிகர்கள் ஃபீலிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் பதிவு

கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 350 ஒருநாள் போட்டிகள், 10,773 ரன்கள், 10 சதங்கள், 73 அரை சதங்கள் இப்படி புள்ளி விவரங்களைக் கொண்டு மகேந்திர சிங் தோனியை அளவிட்டுவிட முடியாது. சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இன, மொழி, எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டவர்.

நளினமான பேட்ஸ்மேன் மட்டுமே இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்கு உரியவராக இருக்க முடியுமென்கிற விதியை உடைத்தவர். எந்த இலக்கணத்துக்கும் உட்படாத அதிரடிகளால் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர். எதிரணிகளின் திட்டங்களைத் தவிடுபொடி ஆக்கியவர். மிக நெருக்கடியான தருணங்களிலும் அசராதவர். எந்தச் சூழ்நிலையிலும் தன் புன்னகையைத் தொலைத்துவிடாதவர். அவர்தான் தோனி.

தோனியின் கேப்டன்ஷியிலும் சர்வாதிகாரத்தின் கூறுகள் இருப்பதை நாம் பார்க்க முடியும். ஐபிஎல், உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் அணியில் அடிக்கடி மாற்றங்களைச் செய்ய மாட்டார். பொதுவாகப் பலருடைய யோசனைகளையும் கேட்பவர்தான் என்றாலும் சில சமயம் தன் உள்ளுணர்வின் உந்துதலில் சட்டென்று முடிவெடுத்துவிடுவார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி, சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, தனது ஓய்வையும் கூட அவ்வாறுதான் அறிவித்தார். ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தீடீரென்று ஓய்வை அறிவித்தார்.

அதேபோல், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான, ஐபிஎல்-இலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேட்பனாக தொடர்ந்து நீடித்துவரும் தோனி, 2010, 2011, 2014, 2018, 2021 மற்றும் 2023 என 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடர் முழுவதும், தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்தினார். பிளே ஆஃப் சுற்றோடு சி.எஸ்.கே. வெளியேறினாலும் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் மைதானத்தில் குவிந்தனர். சென்னை மட்டுமல்லாது, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு என எந்த மைதானமாக இருந்தாலும் மஞ்சள் ஜெர்சியே கோலோச்சியது.

2014 சீசனில் இம்பேக்ட் வீரராக தோனி களமிறங்கினாலும், அவருக்கு கோப்பையுடன் பிரியா விடை கொடுக்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் அடுத்த சீசனில் பார்த்துக் கொள்ளலாம் என பொறுமையோடு காத்திருந்தனர். ஆனால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் 5 ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது.

இதனால், 5 ஆண்டுகளான வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதி ஊதியத்தை குறைத்துக் கொள்ளும் விதி அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன்படி தோனியை இம்பேக்ட் வீரராக எடுத்துக் கொள்ள சென்னை அணி பிசிசிஐயை நாடியது. இதற்கு பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ‘மேஜர் மிஸ்ஸிங்’ என்ற கேப்ஷனோடு வெளியிட்ட புகைப்படத்தில் ‘விசில்’, மஞ்சள் ‘ஜெர்ஸி’, தோனி ‘7’ எண் அடங்கிய டிஷர்ட் அனைத்தையும் குறிப்பிட்டு தோனியின் புகைப்படம் இல்லாமல் வெளியிட்டது.

இதனால், ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர். மேலும், அடித்த ஆண்டு நடைபெற்றவுள்ள ஐபிஎல் 2025 தொடரில் தோனி பங்கேற்க மாட்டார் என்பதின் சமிக்கையாக ரசிகர்கள் கருதுகின்றனர். தலையில் இடி விழுந்தது போன்று சில ரசிகர்கள் கண்ணீர் சிந்தாத குறையோடு பதிலளித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow