பிரபல தென் கொரிய நடிகர் மரணம்.. அடுக்குமாடி குடியிருப்பில் சடலம் மீட்பு
பிரபல தென் கொரிய நடிகர் சாங் ஜே ரிம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
1985 இல் பிறந்த தென் கொரிய நடிகர் சாங் ஜே ரிம் [Song Jae-rim] கடந்த 2009ஆம் ஆண்டு, நடிகைகள் [Actresses] என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘நிலவு சூரியனை தழுவுகிறது' [The Moon Embracing the Sun] என்ற நாடகம் அவருக்கு பெரிய திருப்பு முனையை அளித்தது.
அதனை தொடர்ந்து சாங் ஜே ரிம் எண்ணற்ற டிவி சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சியோல் நகரில் உள்ள சியோங்டாங் மாவட்டத்தில் அவரது குடியிருப்பில், சாங் ஜே ரிம் [வயது 39] இறந்து கிடந்தார். மரணத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், அவர் இறந்து கிடந்த இடத்தில் இரண்டு பக்க கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜே ரிம்-இன் இறுதிச்சடங்கு நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மரணத்தில் முறைகேடு நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?