சூர்யாவுடன் சண்டையா? புறநானுாறு ஹீரோ யாரு: டைரக்டர் சுதா கொங்கரா பதில் இதுதான்
புறநானுாறு படத்தின் ஹீரோ முடிவாகவில்லை. சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யா கேரக்டர் சஸ்பென்ஸ் என்று இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார்.
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா இப்போது இந்தியில் இயக்கியுள்ள படம் சர்ஃபிரா. தலைப்பு பார்த்து மிரள வேண்டாம். இது, தமிழில் சூர்யாவை வை த்து அவர் இயக்கிய சூரரைப்போற்று படத்தின் ரீமேக். சூர்யா வேடத்தில் அக் ஷய்குமார், அபர்ணாபாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்துள்ளனர். தமிழ், இந்தி்க்கு என்ன வித்தியாசம், பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று சுதாவிடம் பேசினோம்.
‘‘சூரரைப்போற்று படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. சூழ்நிலை காரணமாக ஓடிடியில் வெளியானது. ஆனாலும், படத்துக்கு அவ்வளவு வரவேற்பு. அதையெடுத்து இந்தியில் ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்தது. அக் ஷய்குமார் ஹீரோவாக நடிக்க வந்தார். முதல் சந்திப்பிலேயே நீங்க பெரிய ஆக் ஷன் ஹீரோவாச்சே. ஆனால், நேரில் அப்படி இல்லையே என்ற ரீதியில் பேசினேன். அவர் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டார். முதல் ஒரு வாரம் எங்களுக்குள் செட் ஆகவில்லை. என் பாணி வேறு. அவர் பாணி வேறு. கடைசியில் சில காட்சிகளை எடிட் செய்து காண்பித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம்.
உன் மண்டைக்குள் ஏதோ நினைக்கிறார். அதை நான் நடிப்பில் கொண்டு வர முயற்சிக்கிறேன்’ என்று அவர் பெருந்தன்மையுடன் சொன்னார். இந்தியிில் சர்ஃபிரா என்றால் கிறுக்கன் என்று அர்த்தம். கதைப்படி ஹீரோ யாராலும் முடியாத, ரொம்பவே கஷ்டமான ஒரு கனவை நனவாக நினைப்பதால் இந்த தலைப்பு. எனக்கு சின்ன வயதில் இருந்தே இ்ந்தி தெரியும். அதனால், இந்தியில் படம் இயக்குனது பெரிய கஷ்டமி்ல்லை. தவிர, மணிரத்னம் இயக்கிய இந்தி படமான யுவாவில் பணியாற்றி அனுபவமும் இருக்கிறது’’ என்றார் சுதா.
‘‘தமிழில் அபர்ணாபாலமுரளி கேரக்டர் அவ்வளவு வலுவானது இந்தியில் எப்படி’’ என்றால், ‘‘அந்த கேரக்டர் மட்டுமல்ல, தமிழில் கதைக்களம், பின்னணியே வேறு. மதுரை பேக்கிரவுண்ட்டில் படமாக்கினோம். அது படத்துக்கு பலமாக இருந்தது. இந்தி படம் என்பதால் எந்த மாநிலம் பின்னணியில் கதை சொல்வது என்று யோசித்தோம். கடைசியில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில ஏரியா பின்னணியில் படப்பிடிப்பு நடத்தினோம்.செட் போடாமல், நிஜ லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தினோம்.புனா சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் படப்பிடிப்பு நடந்தது. மதுரை மாதிரி அந்த ஏரியாவுக்கும் தனி ஸ்லாங், தனி மவுசு இருக்கிறது. அது கதைக்கு செட்டாகி இருக்கிறது.
இந்தி பீல்டை பொறுத்தவரையில் நாம் ஸ்கிரிப்ட், நம் தேவை சொன்னால் காஸ்ட்டிங் ஏஜன்சிதான் நடிகர்களை அழைத்து வருவார்கள். நாம் டெஸ்ட் வைத்து தேர்ந்தெடுக்கலாம். அந்தவகையில் அபர்ணா முரளி கேரக்டரில் ராதிகா மதன் பின்னி எடுத்து இருக்கிறார். படம் பார்த்துவுிட்டு சொல்லுங்க, ஊர்வசி கேரக்டரில் சீமாபிஸ்வாஸ் வருகிறார். தமிழில் நடித்த பர்வேஷ்ராவல், பிரகாஷ்பெலவாடி இந்தியிலும் இருக்கிறார்கள் ’என்றார்.
‘‘சரி, சூர்யா படத்துல இருக்கிறாரா? அவருக்கு கவுரவ வேடம் என்று தகவல் வருதே’’ என்று கேட்டால், ‘‘ ஆம், சூர்யாவும் படத்தில் இருக்கிறார். அவருக்கு என்ன வேடம் என்பதை படம் பார்த்து தெரிந்தகொள்ளுங்க. சர்ஃபிரா படத்தின் இணை தயாரிப்பாளரும் அவரே. தமிழை பொறுத்தவரையில் எனக்கும் சூர்யாவுக்கும் 20 ஆண்டுகளுக்கு மேலான நட்பு. அவருடன் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அடிக்கடி வெளியே போவோம். நான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே சூர்யாவை தெரியும் என்பதால், அவர் பிரதர் மாதிரி நடந்துகொண்டார். ஆனால், அக் ஷய் இந்தியில் வேறு மாதிரி ஸ்டார். ஆனாலும், ஒரு கட்டத்தில் எங்களுக்குள் நல்ல பிரண்ட்ஷிப் உருவானது. அது படத்துக்குஉதவியாக இருந்தது’ என்றார். ‘‘ படக்குழுவில் பல மாற்றம், மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாசை மாற்றவில்லையே ஏன்’’ என்றால் ‘‘ அவர் கலக்கியிருக்கிறார். ஒரு மராட்டி பாடல் கூட இருக்கிறது. தமிழ் படம் போலவே, இந்தியிலும் அவர் இசை பலம்’’என்றார்.
‘‘படம் இவ்வளவு ஏன் என்றால், இந்தியில் வொர்க்கிங் ஸ்டைல் வேறு. அக் ஷய்குமார் கால்ஷீட்டை சில சமயம் பயன்படுத்த முடியவில்லை. அவர் வேறு படத்துக்கு சென்றுவிட்டார்.அவருக்கும் வேறு சில படங்களை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை. அதனால், இப்போது ரிலீஸ் ஆகிறது.’’ என்றவரிடம்‘‘ அடுத்தும் பயோபிக் எடுக்கிற ஐடியா இருக்கிறதா’’ என்றால் ‘‘இப்போதைக்கு இல்லை. வித்தியாசமான கரு கிடைத்தால் எடுக்க ரெடி. பல ரியல் ஹீரோக்களை சினிமா மூலமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது’’ என்கிறார்.
‘‘புறநானுாறு படம் என்னாச்சு? சூர்யாவுக்கும் உங்களுக்கு சண்டையா’’ என்று பிட் போட்டால் ‘நாங்கள் தெளிவாக அறிக்கை விட்டுவிட்டோம். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அவரும் அடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். நான் அடுத்து தமிழ்ப்படம்தான் பண்ணப்போகிறேன்’’ என்கிறார். புறநானுாறு படத்தில் தனுஷ் நடிக்கப்போகிறார். சிவகார்த்திகேயன் வரப்போகிறார், இன்னொரு ஹீரோ நடிக்கப்போகிறாராமே என்றால், இன்னமும் ஹீரோ விஷயத்தில் பைனல் ஆகவில்லை. அப்படி ஹீரோ கிடைத்தவுடன் நானே முறைப்படி அறிவிக்கிறேன். மீடியாவில்தான் ஏதேதோ செய்திகள் கசிகிறது. எதுவும் முடிவாகவில்லை’ என்று சிரிக்கிறார்.
‘‘பிஸியான இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது மணிரத்னம் செட்டில் உங்களை பார்க்க முடிகிறதே’’ என்று கேட்டால் ‘‘ மணிசாரிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இப்பவும் அவர் எனர்ஜி, அவர் படங்கள் வியக்க வைக்கிறேன். நான் அவர் செட்டுக்கு சென்றால் அவ்வளவு உற்சாகம் கிடைக்கிறது. அதனால், அவ்வப்போது சென்று வருவேன். குருநாதரை,தாய் வீட்டை மறக்க முடியுமா’ என்று விடை பெறுகிறார் சுதா. சர்ஃபிரா ஜூலை 12ல் ரிலீஸ்.
What's Your Reaction?