GameChanger: ஜருகண்டி ரூட்டில் ரா மச்சா மச்சா... ராம் சரணின் கேம் சேஞ்சர் செகண்ட் சிங்கிள் அப்டேட்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை: டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாரிசான ராம் சரண், டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டாராக வலம் வருகிறார். ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. ராஜமெளலி இயக்கிய இந்தப் படத்தில் ராம் சரணுடன் ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து டான்ஸ் ஆடிய நாட்டு நாட்டு பாடல், ஆஸ்கர் விருது வென்று அசத்தியது. இதனால் ராம் சரணின் அடுத்தப் படம் மீது அதிக ஏற்பட்டது.
ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்குப் பின்னர் கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் இணைந்தார் ராம் சரண். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷங்கரின் வழக்கமான பொலிட்டிக்கல் ஜானர் மூவியாக உருவாகும் கேம் சேஞ்சர், இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.
எப்போது இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி வைக்கும் ஷங்கர், கேம் சேஞ்சர் படத்திற்கு தமனை இசையமைப்பாளராக கமிட் செய்தார். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், இப்போது டோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ‘ஜருகண்டி’ என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராபி செய்திருந்தார்.
கலர்ஃபுல் குத்துப் பாடலாக வெளியான ஜருகண்டி டோலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து வெளியாகும் கேம் சேஞ்சர் இரண்டாவது பாடல் இன்னும் சில தினங்களில் ரிலீஸாகிறது. அதற்கு முன்னதாக இப்பாடலின் ப்ரோமோவை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தமன் இசையில் “ரா மச்சா மச்சா” என்ற டைட்டிலில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ, வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. இது ராம் சரணின் ஓபனி சாங் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்பாடலில், தமிழ் லிரிக்கலை மட்டும் விவேக் எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பின்னர் செகண்ட் சிங்கிள் ரிலீஸாகிறது. இதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி உட்பட மற்ற அப்டேட்களும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?