ஒரு பக்கம் ஈ.வெ.ரா.. மறுபக்கம் வேலு நாச்சியார்.. குழப்பத்தில் விஜய் - ஹெச்.ராஜா காட்டம்

ஒரு பக்கம் ஈ.வெ.ரா.வின் படத்தையும், மறுபக்கம் வேலு நாச்சியார் படத்தையும் வைத்து நடிகர் விஜய் குழப்பத்தில் இருக்கிறார் என்று பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Nov 14, 2024 - 01:45
Nov 14, 2024 - 01:49
 0
ஒரு பக்கம் ஈ.வெ.ரா.. மறுபக்கம் வேலு நாச்சியார்.. குழப்பத்தில் விஜய் - ஹெச்.ராஜா காட்டம்
நடிகர் விஜய் குழப்பத்தில் இருக்கிறார் - பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா

தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் மூத்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனத்திற்கு செய்தார். அங்கு அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஹெச்.ராஜாவிற்கு திருக்கோயில் சார்பில் மலர், மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருக்கின்றனர். 294 பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆசிரியர்களாக உள்ளனர் இதனை துணை வேந்தரே கூறுகிறார்.

ஒரு நபர் 11 கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார். ஆதார் அட்டையை போலியாக செய்து இப்படி ஆசிரியர்களாக வந்துள்ளனர். பல பள்ளிகள் தமிழகத்தில் மூடும் நிலைக்கு வந்துள்ளது. ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியர் இருவர் உள்ளனர். தமிழகத்தில் சாத்தியமற்றது என்ற எதுவுமே இல்லை.

அரசு பேருந்தில் உட்கார்ந்திருப்பவர்கள் பேருந்துக்கு வெளியே ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அரசு பேருந்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் டயர் கழன்று ஓடிவிடும் நிலையில் உள்ளது. தமிழக அரசாங்கம் மிக மோசமான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய் கட்சி குறித்து பேசுகையில் சிந்தனையில் தெளிவு இல்லை, காரணம் என்னவென்றால், ஒரு அரசியல் கட்சிக்கு செயல்பாட்டில் தெளிவு இருக்க வேண்டும். அவரது கொள்கையில் வேலுநங்கை நாச்சியார் படம் இருக்கிறது. 175 ஆங்கிலேயரை போரிட்டு வென்றவர்.

மற்றொரு பக்கம் ஈவேரா பெரியார் படம் இருக்கிறது. 1944இல் சேலத்தில் முதல் தி.க. மாநாட்டில் தீர்மானம் போடுகிறார்கள் ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் லண்டனில் இருந்து ராஜதானியை ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.

ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்பு கொடி ஏந்த வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயர் கூலி ஈவேரா ஒரு பக்கம். முழுவதும் குழப்பத்தில் இருக்கிறது விஜய் கட்சி. மொத்தமாக குழப்பமாக இருக்கிறார்கள். ஒன்று தேசியவாதியாக இருக்கிறீர்களா? அல்லது பிரிவினைவாதியாக இருக்கிறீர்களா என்று கொள்கை முடிவு இருக்க வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow