சினிமா

This Week OTT Release: ஆடுஜீவிதம் முதல் அஞ்சாமை வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

July 19 OTT Release Movies List : பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் உள்ளிட்ட மேலும் பல படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் (ஜூலை 19) ஓடிடியில் வெளியாகின்றன.

This Week OTT Release: ஆடுஜீவிதம் முதல் அஞ்சாமை வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
July 19 OTT Release Movies List

July 19 OTT Release Movies List: இந்த வாரம் ஓடிடியில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகிறது. மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கிய திரைப்படம் தி கோட் லைஃப் என்ற ஆடுஜீவிதம். பிரபல எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவானதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. கேரளாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்த ஆடுஜீவிதம். 

சுமார் 10 ஆண்டுகளாக உருவான இந்தப் படத்திற்காக பிருத்விராஜ் 30 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடித்திருந்தார். அதோடு ஏஆர் ரஹ்மானின் இசையும் ஆடுஜீவிதம் படத்துக்கு அதிக ஹைப் கொடுத்திருந்தது. மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக மார்ச் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆடுஜீவிதம். ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்ததால், பாக்ஸ் ஆபிஸிலும் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், ஆடுஜீவிதம் நாளை (ஜூலை 19) முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனால் ஆடுஜீவிதம் படத்தை பார்க்க ஓடிடி ரசிகர்களும் அதிக ஆர்வத்தோடு உள்ளனர்.

அதேபோல் விதார்த், வாணி போஜன், ரகுமான் நடித்த அஞ்சாமை திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான அஞ்சாமை கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து தற்போது சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது அஞ்சாமை. மேலும் ரயில் என்ற தமிழ்ப் படமும் இந்த வாரம் முதல் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தி அகாலி என்ற தமிழ்த் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

தெலுங்கில் பஹிஷ்கரனா (Bahishkarana) என்ற வெப் சீரிஸ், இந்த வாரம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மியூசிக் ஷாப் மூர்த்தி என்ற தெலுங்கு மூவி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் நாகேந்திராஸ் ஹனிமூன் (Nagendran’s Honeymoons) என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்தியில் பர்சாக் (Barzakh) வெப் சீரிஸ், ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகிறது. அதேபோல், திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் (Tribhuvan Mishra CA Topper) என்ற வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 

நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்கு, Land of Bad, Find Me Falling, Sky walkers A Love Story, Homicide Los Angeles வெப் சீரிஸ், Simone Biles Rising வெப் சீரிஸ், Master Of The House என்ற தாய்லாந்து சீரிஸ், 500 Days Of Escobar என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகியவை வெளியாகின்றன. அமேசான் ப்ரைமில், The K சீசன் 2, Rebel பிரென்ச் வெப் சீரிஸ், My Spy The Eternal City, Gen Z சைனீஸ் வெப் சீரிஸ் ஆகியவை இந்த வாரம் வெளியாகின்றன.