செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. நீதிமன்ற காவல் 44வது முறையாக நீட்டிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Jul 8, 2024 - 17:35
 0
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. நீதிமன்ற காவல் 44வது முறையாக நீட்டிப்பு
Senthil balaji case

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து  விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டரை தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, வங்கி தொடர்பான ஆவணங்களை   வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும்  தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற 10ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 44வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow