துலீப் கோப்பையில் இடம்பெறாதது ஏன்? ரிங்கு சிங் Open Talk

துலிப் கோப்பைக்கு தான் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.

Aug 20, 2024 - 10:40
Aug 20, 2024 - 10:42
 0
துலீப் கோப்பையில் இடம்பெறாதது ஏன்? ரிங்கு சிங் Open Talk

துலிப் கோப்பைக்கு தான் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடர் தான் தூலிப் கோப்பை. 1961ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த துலீப் கோப்பை, இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் குமார் ஸ்ரீ துலீப் சிஞ்சியின் பெயரை தழுவி உருவாக்கப்பட்டது. 2024ம் ஆண்டின் துலீப் கோப்பைக்கான போட்டிகள் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கயிருக்கிறது.  இந்த சீசனில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மன் கில்,. ஜெய்ஸ்வால், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ் உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் விளையாட உள்ளனர்.

பொதுவாக துலீப் கோப்பை மண்டலங்கள் வாரியாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை 6 அணிகளுக்கு பதிலாக ரவுண்ட் ராபின் என்ற முறையில் இந்தியா ஏ,பி,சி,டி ஆகிய 4 அணிகள் மட்டுமே விளையாட உள்ளன. இந்த முறையில் நாக் அவுட்டுக்கு பதிலாக ரவுண்ட் ராபின் முறையில் இத்தொடர் நடத்தப்பட்டு போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டீம் ஏ-வில் சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், மயங் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், திலக் வர்மா, சிவம் துபே, டானுஷ் கோடின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலில் அஹ்மத், ஆவேஷ் கான், வித்வாத் காவேரப்பா, குமார் குஷக்ரா ஷஸ்வட் ராவத் உள்ளனர். டீம் பி-ல் அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), ரிஷப் பண்ட், யசஸ்வி ஜெய்ஸ்வால், சர்பாராஸ் கான், முஷீர் கான், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமத் சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சஹர், சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, நாராயண் ஜெகதீசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டீம் சி-க்காக ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிடார்,சூர்யகுமார் யாதவ், அபிஷேக் போரேல், பாபர் இந்திரஜித், ரித்திக் ஷாக்கீன், மாணவ் சுதர், உம்ரான் மாலிக், வியஷக் விஜய்குமார், அன்சல் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங் மார்கண்டே, ஆர்யன் ஜுயல், சந்தீப் வாரியர் ஆகியோர் உள்ளனர். டீம் டி-ல் ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைட், யாஷ் துபே, தேவ்தூத் படிக்கல், இஷான் கிஷான், ரிக்கி பூய், சரண்ஸ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாக்ரே, ஹர்ஷிட் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் செங்குப்தா, கேஎஸ் பரத், சௌரப் குமார் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஆனால், இந்த உள்ளூர் போட்டிகளுக்காக விளையாட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. டி20 தொடர்களில் சிறப்பான திறனை வெளிபடுத்திய ரிங்கு சிங் ஓரங்கட்டப்படுவது ஏன் என ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை கிளம்பியது. 2023ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடினார் ரிங்கு சிங். 

Who is Rinku Singh: जानें रिंकू सिंह का पूरा जीवन परिचय

ஆனாலும், துலீப் கோப்பையில் விளையாட பிசிசிஐ தேர்வு செய்துள்ள 60 கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தனக்கான இடத்தை பிடிக்க அவர் தவறினார். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இதுகுறித்து மனம்திறந்தார் ரிங்கு சிங். 

மேலும் படிக்க: அரிதான சூப்பர் மூன் நிகழ்வை பார்க்க தவறிவிட்டீர்களா? கவலையில்லை..இதை செய்யுங்கள்..

உள்ளூர் போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை எனவும், ரஞ்சி கோப்பையில் நிறைய போட்டிகளில் தான் விளையாடவில்லை எனவும் இதனால்தான் தாம் துலீப் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனவும் உண்மையை போட்டுடைத்திருக்கிறார் ரிங்கு சிங். மேலும், அடுத்தடுத்த போட்டிகளில் சேர்க்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாமாக முன்வந்து இவ்வாறு சொன்னதால், ரசிகர்கள் மத்தியில் இருந்த குழப்பம் தீர்ந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow