பிரிமீயம் லுக்கில் கெத்தாக களமிறங்கும் 'ரியல்மி நார்சோ என் 61'.. இவ்வளவு சிறப்புகளா?
Realme Narzo N61 Will Launch In India : 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கும் 500 mAh பேட்டரி, 90HZ ரெப்ரஷ் ரேட்டுடன் HD+ டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ என் 61 போன் களமிறங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Realme Narzo N61 Will Launch In India : சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ரியல்மி சீரிஸ் போன்கள் இந்தியாவில் கால்பதித்த அடுத்த சில மணி நேரங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்து விடும்.
இந்நிலையில், ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ என் 61 (Realme Narzo N61) ஸ்மார்ட் போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 29ம் தேதி மதியம் 12 மணிக்கு ரியல்மி நார்சோ என் 61 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் 'எக்ஸ்' தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் அமேசான் தளம் வாயிலாக இந்த போனை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ என் 61 போனின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. லைட் ஃப்ளு கலரை கொண்டிருக்கும் ரியல்மி நார்சோ என் 61 பிரிமீயம் லுக் போன்று காட்சியளிக்கிறது. இது டபுள் கேமரா செட்அப்பை கொண்டுள்ளது.
முன்பக்க கேமரா 5MP கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கும் 500 mAh பேட்டரி, 90HZ ரெப்ரஷ் ரேட்டுடன் HD+ டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ என் 61 போன் களமிறங்கும் என தகவல்கள் கூறுகின்றன. இது தவிர யுனிசெக் சிப்செட்டுடன், ஆண்ட்ராய்ட் 15 ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் இந்த போன் களமிறங்கும் என தகவல்கள் உலா வருகின்றன.
மேலும் IP54 ரேட்டிங் பெற்ற இந்த போன் தண்ணீரில் இருந்தும் கடுமையான தூசியில் இருந்தும் தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போனின் விலை விவரம் வெளியாகிவில்லை.
இதேபோல் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) மாடல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 187 கிராம் எடை கொண்ட இந்த போன் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளி வந்துள்ளது. 2 ஸ்கீரின்கள் கொண்ட இந்த போனில் 6 .7 இன்ச் ஃபுல் HD அமோலோட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3.4 இன்ச் சூப்பர் அமலோட் டிஸ்பிளேவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் 512 ஜிபி ஸ்டோரேஜ் என 2 விதமான வேரியன்ட்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கிறது. கேமராவை பொறுத்தவரை 50MP மெயின் கேமரா, 10MP செல்பி கேமரா அம்சங்கள் உள்ளன. 25W adapter சப்போர்ட் கொண்ட 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.90,000ல் இருந்து தொடங்குகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும்.
What's Your Reaction?






