OPPO A3 Pro 5G Phone Price Cut : அடேங்கப்பா! சாம்சங், ஒப்போ போன்களுக்கு இவ்வளவு விலை குறைப்பா?

OPPO A3 Pro 5G Phone Price Cut in Amazon : 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வேகம் கொண்ட டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி, இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனில் உள்ளன.

Aug 23, 2024 - 17:18
Aug 24, 2024 - 15:34
 0
OPPO A3 Pro 5G Phone Price Cut : அடேங்கப்பா! சாம்சங், ஒப்போ போன்களுக்கு இவ்வளவு விலை குறைப்பா?
Samsung And Oppo Phone

OPPO A3 Pro 5G Phone Price Cut in Amazon : அமேசான் விற்பனை தளம் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy Note 55) ஸ்மாட்போனுக்கு 7% விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.45,999 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.42,999 என்ற விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும். மொத்தமாக ரூ.3,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.6,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதேபோல் ஐசிஐஐ வங்கி கார்டு பயன்படுத்தினாலும் கூடுதல் தள்ளுபடி பெறலாம். இந்த போனில் 5.7 இன்ச் அமோலோட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 32GB 4GB RAM, 64GB 4GB RAM, 128GB 4GB RAM என 3 வேரியன்ட்களில் இந்த போன் கிடைக்கிறது.

கேமராவை பொறுத்தவரை 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டத்துடன் உள்ளது. மேலும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வேகம் கொண்ட டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி, இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இதேபோல் அமேசான் தளத்தில் ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) மாடல் போனுக்கு 14% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதாவது ரூ.20,999 என்ற விலைக்கு அறிமுகமான இந்த போனை இப்போது ரூ.17,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். மொத்தமாக ரூ.3,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி கார்டு மற்றும் HDFC வங்கி கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1,200 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒப்போ ஏ3 ப்ரோ மாடல் போனின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை இதில் 6.67 இன்ச் HD பிளஸ் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 6GB + 128GB மற்றும் 8GB + 256GB என 2 வேரியன்ட்களில் இந்த போன் கிடைக்கிறது. கேமராவை பொறுத்தவரை 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow