பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Moto G45 5G; விலை, அம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்களுக்காகவே புதிய Moto G45 5G ஸ்மார்ட் போனை மோட்டொரோலா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது.

Aug 22, 2024 - 18:49
Aug 23, 2024 - 10:16
 0
பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Moto G45 5G; விலை, அம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Moto G45 5G

மொபைல் போன் விற்பனையில் இந்திய சந்தையில் மோட்டொரோலா நிறுவனம் புதிதாக புரட்சியை தொடங்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் பாமர மக்களின் பட்ஜெட்டுக்குள் அடங்கக்கூடிய புதிய Moto G45 5G மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கண்களைக் கவரும் வகையில் பிரில்லியண்ட் புளூ, பிரில்லியண்ட் கிரீன் மற்றும் வைவா மெஜந்தா ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. 

Moto G45 5G விலை: 

4GB RAM/128GB கொண்ட Moto G45 5G  மொபைல் போன் ரூ. 10.999க்கு விற்பனையாகிறது. இதே போல 8GB RAM/128GB கொண்ட Moto G45 5G  மொபைல் போனின் விலை ரூ. 12,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஸ் மற்றும் IDFC வங்கி கார்டுகள் வைத்திருக்கும் நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து ரூ. 1000 தள்ளுபடி செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

Moto G45 5G அம்சங்கள்: 

புதிதாக சந்தைக்கு வந்துள்ள Moto G45 5G மொபைல் போனில் 1600 x 720 pixels மற்றும் 120Hz refresh rate கொண்ட 6.45 inch HD+ டிஸ்பிளே உள்ளது. 500 nits வரை வெளிச்சத்தைக் கொடுக்ககூடிய இந்த டிஸ்பிளேவில் Corning Gorilla Glass 3 பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 6s Gen 3 chip, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்திற்காக Adreno 619GPU உள்ளிட்டவை அடங்கும். இதைத்தவிர 8GB - LPDDR4X RAM மற்றும் 128GB - UFS 2.2 ஸ்டோரேஜும் இடம்பெற்றுள்ளன. 

மேலும் இந்த புதிய Moto G45 5G ஸ்மார்ட் போன், 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது. இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 தொழில்நுட்பம் கொண்டுள்ள இந்த மொபைல் போனில் Motoroloa UX skin உள்ளது. மேலும் ஒரு ஆண்டிற்கான OS அப்டேட் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி வழங்குவதாக மோட்டொரோலா நிறுவனம் உறுதி அளித்திருக்கிறது. 

மேலும் படிக்க: முட்டை பப்ஸ்க்கு ரூ. 3.62 கோடியா? ஜெகன் மோகன் ரெட்டியை விளாசிய எதிர்கட்சியினர்!

வெளியிருந்து பார்க்கும்போது 50MP primary sensor மற்றும் 2MP macro lens உடன் கூடிய இரண்டு கேமராக்கள் இந்த போனில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் தரமான மற்றும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் போனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் Moto G45 5G-யை வாங்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow