Jagan Mohan Reddy : முட்டை பப்ஸ்க்கு ரூ. 3.62 கோடியா? ஜெகன் மோகன் ரெட்டியை விளாசிய எதிர்கட்சியினர்!
Opposition Party Blasted Jagan Mohan Reddy on Egg Buffs : ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரூ. 3.62 கோடிக்கு முட்டைப் பப்ஸ் வாங்கியிருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

Opposition Party Blasted Jagan Mohan Reddy on Egg Buffs : அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திராவின் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில் பவன் கல்யாணுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி அசாத்தியமான வெற்றி பெற்றார். ஆந்திராவின் முகமாகக் பார்க்கப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் தோல்விக்கு பிறகு, அவரது ஆட்சியில் நடந்த ஊழல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தற்போது ஒவ்வொன்றாகத் தலை தூக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தினந்தோறும் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி முழி பிதுங்கி இருப்பதாக தெரிகிறது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், ஒரு முறை கூட மக்களை அவர் நேரடியாக சந்திக்கவில்லை என இப்படி பல புகார்கள் எழுந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு அதற்கான பலனை அவர் அனுபவித்து வருகிறார். இதற்கிடையே பல்வேறு நிதி முறைகேடுகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவி வகித்தபோது ஜெகன்மோகன் ரெட்டி, அவரது குடும்பத்தினருக்காக ரிஷிகொண்டாவில் அரண்மனை போன்ற ஒரு கட்டடம் கட்டியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுமட்டுமில்லாமல், அவரது குடும்பத்தினருக்காக பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது, சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்வது, விடுமுறைகளை கொண்டாடுவதற்கு ஹெலிகாப்டர்கள் என அரசு பணத்தை பயன்படுத்தியதாக பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. அதாவது ஜெகன் மோகன் ரெட்டி, தனது ஆட்சிக் காலத்தில் அவரது அலுவலகத்திற்கு ரூ. 3.62 கோடிக்கு முட்டைப் பப்ஸ் வாங்கியிருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 72 லட்சம் ரூபாய் முட்டை பப்ஸ்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு மட்டும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 993 முட்டை பப்ஸ் சாப்பிட்டு இருக்கிறார். 5 ஆண்டுகளில் மொத்தம் 18 லட்சம் முட்டை பப்ஸ் வாங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி இந்த அளவிற்கு அரசு பணத்தை வீணடித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: “சினிமா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்” - சுரேஷ் கோபி பேச்சால் பரபரப்பு
இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், ‘முட்டை பப்ஸ் ஜெகன் மோகன் ரெட்டி’ என்ற ஹேஷ்டேகை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






