Raayan: ராயன் ஸ்பெஷல் ஷோ... அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு... தனுஷ் ரசிகர்கள் ரெடியா..?

Actor Dhanush Movie Raayan Special Show : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Jul 24, 2024 - 18:27
Jul 25, 2024 - 10:36
 0
Raayan: ராயன் ஸ்பெஷல் ஷோ... அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு... தனுஷ் ரசிகர்கள் ரெடியா..?
Actor Dhanush Movie Raayan Special Show

Actor Dhanush Movie Raayan Special Show : தனுஷின் 50வது படமாக ராயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில், எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன், ராவான ஆக்ஷன் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயன் படத்தின் ட்ரெய்லரிலேயே ரசிகர்களை ரத்தத்தில் நீராட்டியிருந்தார் தனுஷ்.  

சினிமா விமர்சகர்கள் உட்பட பலரும், ராயன் படம் கொரியன் ஸ்டைலில் உருவாகியுள்ளதாக கூறியிருந்தனர். தனுஷின் படங்களுக்கு வழக்கமாகவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் ராயன் படத்தை அவரே இயக்கியுள்ளதால் இந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிற வைத்துள்ளது. ராயன் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல், ராயன் படத்திற்கான ஆன்லைன் புக்கிங்கும் அமர்க்களமாக தொடங்கியது. 

இந்நிலையில் ராயன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அஜித்தின் துணிவு படம் வெளியானபோது, அதிகாலை 4 மணி காட்சிக்குச் சென்றிருந்த ரசிகர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அப்போது முதல் அதிகாலை காட்சியை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு. ஆனால், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படம் ரிலீஸாகும் போது, அனுமதிகேட்டு கடிதம் கொடுத்தால், சிறப்பு காட்சிக்கு மட்டும் அனுமதி கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. அதன்படி, தனுஷின் ராயன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு சன் பிக்சர்ஸ் அனுமதி கேட்டிருந்தது.

இதனையடுத்து ராயன் ரிலீஸாகும் 26ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான கமலின் இந்தியன் 2 படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல், காலை 9 மணிக்கு ராயன் ஸ்பெஷல் ஷோ திரையிடப்படுகிறது. 26ம் தேதி அன்று கடைசியாக திரையிடப்படும் காட்சி, அதிகாலை 2 மணிக்குள் முடிந்துவிட வேண்டும் எனவும் அரசின் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேநேரம் பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் ராயன் படத்தின் முதல் காட்சி, காலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இதற்கான ஆன்லைன் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், இதுவரை 90 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாம். அதேபோல் அமெரிக்காவில் இந்திய நேரப்படி அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow