அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் மூவியாக உருவாகியுள்ள அமரன், தீபாவளி ஸ்பெஷலாக அக்டோபர் 30ம் தேதி ரிலீஸாகிறது. அமரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முதன்முறையாக ராணுவ வீரராக அவதாரம் எடுத்துள்ளார்.
ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள அமரன் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தற்போது சாய் பல்லவியின் கேரக்டரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி கேரக்டரில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இதில் அவரது கேரக்டர் பெயர் இந்து ரெபேக்கா வர்கீஸ் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் சாய் பல்லவியின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் க்யூட் பேபியாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயன் உடனான காதல் காட்சிகளில் தனது க்யூட்டான நடிப்பால் ஸ்கோர் செய்துள்ள சாய் பல்லவி, இன்னும் சில இடங்களில் கண் கலங்கவும் வைத்துள்ளார். அதேபோல், சிவகார்த்திகேயனின் கேரக்டரும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அமரன் படத்தின் டீசரில் அடர்த்தியான தாடி, மீசை என Rugged பாய் லுக்கில் மிரட்டியிருந்தார் சிவா. ஆனால், இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில், மீசை, தாடி இல்லாமல் ரொம்பவே இளமையான கெட்டப்பில் மாஸ் காட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த கெட்டப் அவரது டீ-ஏஜிங் லுக் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேஜர் முகுந்த் வரதராஜன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரியல் போட்டோ போல், அமரன் படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் இருக்கும் காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் அமரன் படத்தில் ஆக்ஷன் மட்டும் இல்லாமல், அழகான லவ் ஸ்டோரியும் இருக்கும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க: அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்
தீபாவளி ரேஸில் அமரன் படத்துக்குப் போட்டியாக, ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது. இந்த பாடல் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகவுள்ள 700வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.