Actor Ajith Kumar bought Ferrari Race Car in Dubai : ரசிகர்களால் ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என கொண்டாடப்படும் அஜித், முன்பைவிட நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆண்டுக்கு ஒரு படம் தான் என்ற பாலிசியில் இருந்த அஜித், தற்போது ஒரேநேரத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முழுக்க அஜர்பைஜானில் நடைபெற்றது. இதற்காக பல மாதங்கள் அஜர்பைஜானில் தங்கியிருந்த அஜித், அவ்வப்போது துபாய் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதேபோல், விடாமுயற்சியில் நடித்து வரும் ஆரவ் உள்ளிட்ட தனது குழுவினருடன் பைக் டூர் செல்வதிலும் ஆர்வம் காட்டினார். உலகம் முழுவதும் பைக்கில் டூர் செல்ல வேண்டும் என்பதே அஜித்தின் வாழ்நாள் ஆசையாக உள்ளது. இன்னொரு பக்கம் மீண்டும் ரேஸ் கார் டிரைவிங் பிராக்டிஸ் செய்து வருகிறார் அஜித். சமீபத்தில் கூட துபாய் சென்றிருந்த அஜித், அங்கு ரேஸ் ட்ராக்கில் BMW கார் டிரைவ் செய்து அசத்தினார். அஜித் ரேஸ் கார் ஓட்டிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில், அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் முடித்துவிட்டு துபாய் பறந்த அஜித், அங்கு புதிய ஃபெராரி கார் வாங்கியுள்ளார். சிவப்பு நிறத்தில் செம ஸ்டைலிஷாக இருக்கும் ஃபெராரி கார் அருகே அஜித்தும் கெத்தாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். உலகளவில் ரேஸ் கார்கள் என்றால் அதில் ஃபெராரி மாடல்கள் இல்லாமல் இருக்காது. அதேபோல், விலை, பராமரிப்பு என அனைத்திலும் ஃபெராரி கார் ரொம்பவே காஸ்ட்லி ஆகும். ஆனாலும் அஜித் 9 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபெராரி கார் வாங்கியுள்ளது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
அஜித்தின் ஃபேவரைட் கலர் வெள்ளை நிறமாகும், ஆனால், இந்த ஃபெராரி கார் சிவப்பு நிறத்தில் தெறி மாஸ்ஸாக உள்ளது. அதேபோல், அஜித் புதிய ரேஸ் கார் வாங்கியுள்ளதால், அவர் மீண்டும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பல ரேஸ்களில் பங்கேற்றுள்ளார் அஜித். அப்போது அடிக்கடி விபத்து நடந்ததால், அதில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் பல ஆண்டுகளாக பைக், கார் ரேஸ்களில் அஜித் பங்கேற்பது கிடையாது. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
விடாமுயற்சியை முடித்துவிட்ட அஜித், அடுத்து குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்த ஷெட்யூல் துபாயில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் கேஜிஎஃப், சலார் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் இணையவுள்ளாராம் அஜித். இது அஜித்தின் 64வது படமாக இருக்கும் எனவும், இதனையடுத்து ஏகே 65 படத்திலும் இக்கூட்டணி இணையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோலிவுட் ஹீரோக்கள் ஆடி, BMW, மெர்சிடிஸ் பென்ஸ் என சொகுசு கார்கள் வாங்கிக் கொண்டிருக்க, தல அஜித் ஃபெராரி கார் வாங்கி தான் ஒரு ரேஸ் கிங் என நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.