என்னங்க சொல்றீங்க! 'விஸ்கி குடிப்பவர்கள் பெண்ணாக மாறி விடுவார்களா?'.. ஆய்வில் அதிர்ச்சி!

தொடர்ந்து விஸ்கி சாப்பிடுவர்களின் உடலில் 'பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள்' என்ற அமிலம் அதிக அளவில் சுரந்து அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக பெண்ணாக மாறுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

Jul 24, 2024 - 18:09
Jul 25, 2024 - 10:38
 0
என்னங்க சொல்றீங்க! 'விஸ்கி குடிப்பவர்கள் பெண்ணாக மாறி விடுவார்களா?'.. ஆய்வில் அதிர்ச்சி!
Men Who Drink Whiskey Become More Feminine

இன்றைய காலக்கட்டத்தில் மதுப்பழக்கம் அதிகரித்து விட்டது. குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் மட்டுமின்றி அதிக அளவிலான பெண்களும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். மிக முக்கியமாக இளைய தலைமுறையினர் மதுவின் பிடியில் அதிகமாக சிக்கியுள்ளனர்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக பெற்றோர்களுக்கு பயந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு செல்ல இளைஞர்கள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது சில இடங்களில் தந்தையும், மகனும் சேர்ந்து மது குடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறி விட்டது. 

சுக நிகழ்வுகள் முதல் துக்க நிகழ்வுகள் வரை அனைத்துக்கும் மது குடிப்பது வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து மது குடித்து கும்மாளமடிப்பது இப்போது பேஷனாகி விட்டது. ஏதாவது திருமண வீட்டுக்கு சென்று வந்தால் 'மது அருந்தி இருக்கிறீர்களா?' என்று கோபத்துடன் கேள்வி கேட்கும் காலம்போய், 'என்ன கல்யாணம் வீட்டுக்கு போயும் மது குடிக்கவில்லையா? ஆச்சரியமாக இருக்கே' என்றும் கேட்கும் காலம் வந்து விட்டது 

'மது குடிக்காதீர்கள்; உடல் நலனுக்கு ஆபத்து' என்று மதுபாட்டிலில் தெளிவாக போட்டு இருந்தாலும், அரசும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு செய்தாலும் மது குடிப்பவர்கள் ஒருபோதும் திருந்துவதாக தெரியவில்லை.

நமது இந்தியாவை பொறுத்தவரை பீர், பிராந்தி, விஸ்கி என்ற மது வகைகளை குடிப்பவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக பீர் குடிப்பவர்கள் மிக அதிகம் உள்ளனர். இதிலும் சிலர் பீர் குடித்தால் மற்ற வகை மதுவை தொட மாட்டார்கள். வேறு சிலர் பிராந்தியில் ஒரு சில வகைகளை மட்டுமே தொடர்ந்து விரும்பி குடிப்பார்கள். இதேபோல் விஸ்கியை மட்டும் குடிக்கும் சிலர் மற்ற மதுவகைகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

இந்நிலையில், மது குடிப்பவர்களின் தலையில் இடியை இறக்கியது போன்ற ஒரு அதிர்ச்சி தகவலை பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டுள்ளன. ''வேற என்ன சொல்ல போற? மது குடித்தால் கிட்னி பாழாகி விடும்; வேறு உடல்நல பாதிப்பு ஏற்படும் அதுதானே.. இதெல்லாம் எங்களுக்கு தெரியும்' என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அதுதான் இல்லை. 

 'தொடர்ந்து விஸ்கி குடித்து வரும் ஆண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் பெண்ணாக மாறி விடுவார்கள்' என்ற அதிர்ச்சி தகவலை பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இது தொடர்பாக 100 குடிமகன்களுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். 

அதாவது இந்த 100 பேருக்கும் ஒரு மணி நேரத்துக்குள் 8 முறை மது கிண்ணங்களில் விஸ்கியை ஊற்றி கொடுத்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெளிவாக சொல்லவேன்டுமென்றால் தொடர்ந்து விஸ்கி சாப்பிடுவர்களின் உடலில் 'பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள்' என்ற அமிலம் அதிக அளவில் சுரந்து அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக பெண்ணாக மாறுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

விஸ்கி குடித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 100 பேரும் பெண் தன்மையுடன் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பெண்களை போன்று மிகவும் அமைதியாக, பெண் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும், விஸ்கியை தொடர்ந்து குடிப்பவர்கள் நாளைடைவில் முழு பெண்ணாக மாறிவிட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. 'பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள்'  அதிகமாக சுரந்தால் அது ஆண் தன்மையை காலி செய்து விடும் என்பது ஆராய்ச்சி முடிவுகளின் கூற்றாக உள்ளது. ஆகவே மது பிரியர்களே.. விஸ்கி பிரியர்களே... இனி உஷாராக இருங்க. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow