India Population 2024 : 2036ல் மக்கள் தொகை 152 கோடி.. இந்திய ஆண்களுக்கு அப்பவாவது ஈஸியா கல்யாணம் நடக்குமா?

Indian Govt Report on Sex Ratio of Population in 2036 : 2036ஆம் ஆண்டில் ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் சற்று அதிகரிக்கும். அதாவது 2011ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 943 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை 2036-ல் 952-ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 14, 2024 - 08:24
Aug 15, 2024 - 09:59
 0
India Population 2024 : 2036ல் மக்கள் தொகை 152 கோடி.. இந்திய ஆண்களுக்கு அப்பவாவது ஈஸியா கல்யாணம் நடக்குமா?
Indian Govt Report on Sex Ratio of Population in 2036

Indian Govt Report on Sex Ratio of Population in 2036 : திருமணம் செய்வதற்கு ஆண்களுக்கு பெண் கிடைப்பது கடும் சிரமமாக உள்ளது அதற்குக் காரணம் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பிறப்பு சதவிகிதம் குறைவாக இருப்பதுதான். 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 943 பெண் குழந்தைகள்தான் பிறக்கிறார்கள் என மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறையின் புள்ளிவிபரம் சொல்கிறது. வரும் 2036ஆம் ஆண்டு ஆண்களுக்கு நிகராக பெண்கள் விகிதம் சற்று அதிகரிக்கும் என்று ஆறுதல் தகவல் கூறியுள்ளது புள்ளிவிபரம்.

90 கிட்ஸ்கள் பலருக்கும் இன்னமும் திருமணம் நடைபெறாமலேயே உள்ளது காரணம் பெண் கிடைக்கவில்லை. 90 களில் கருவிலேயே பாலினம் கண்டறிந்து பெண் கருவை அழித்தனர் அதையும் மீறி பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து சிசுக்கொலை செய்து விடுவார்கள். இதன் காரணமாகவே பெண்கள் பிறப்பு விகிதாச்சாரம் குறைந்து போனது. அப்போது பெண் குழந்தைகளை அழித்த பாவம் தற்போது பலருக்கும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

2 கே கிட்ஸ்களுக்கு ஆறுதலான செய்தியாக வெளியாகியுள்ளது ஒரு புள்ளி விபரம். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், ‘இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023’ என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வரும் 2036 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியாக அதிகரிக்கும். கடந்த 2011ஆம்  (48.5%) ஆண்டுடன் ஒப்பிடும்போது 2036ஆம் ஆண்டில் (48.8%) ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் சற்று அதிகரிக்கும். அதாவது 2011ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 943 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை 2036ஆம் ஆண்டில் 952ஆக அதிகரிக்கும்.

மேலும் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், 2011-ம்ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விகிதம் 2036-ல் குறையும். இதற்கு மாறாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விகிதம் படிப்படியாக அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து தகவலை திரட்டி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்கேற்பு மற்றும் முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் நிலையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது. எது எப்படியே 2036ஆம் ஆண்டில் ஆண்களின் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow