Weather Update Today : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இடியோடு கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்ச் அலர்ட்.. யாரெல்லாம் உஷார்

Weather Update Today IMD Issue Orange Alert : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 13) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Aug 13, 2024 - 14:07
Aug 13, 2024 - 20:13
 0
Weather Update Today : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இடியோடு கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்ச் அலர்ட்.. யாரெல்லாம் உஷார்
weather update orange alert

Weather Update Today IMD Issue Orange Alert : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
        
தமிழகத்தில் ஒருசில இடங்களில் (உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்) மழை  பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழனி , கொடைக்கானல், வேலூர் காட்பாடியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்தாலும் திருநெல்வேலியில் வெயில் சுட்டெரித்துள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. 

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 13) தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.   நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (ஆகஸ்ட் 14) தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி,  தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும்  கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

15.08.2024:தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்   இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும்  கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.08.2024:   நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,  திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  கள்ளக்குறிச்சி, கடலூர்,  விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

17.08.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,  நீலகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும்  கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 

13.08.2024 முதல் 17.08.2024 வரை: மன்னார்   வளைகுடா,  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

13.08.2024: மத்திய  வங்கக்கடலின் தெற்கு பகுதிகள்,   தெற்கு   வங்கக்கடலின்  வடக்கு  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.08.2024: மத்திய, தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின்  வடக்கு  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.08.2024 மற்றும் 16.08.2024: மத்திய, தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின்  வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.08.2024: மத்திய,   தென்கிழக்கு  மற்றும்  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 

13.08.2024 முதல் 17.08.2024 வரை: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளாவில் ஆகஸ்ட் 15 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த நான்கு நாட்களாக சற்று குறைந்த நிலையில்  மீண்டும் வலுவடைய துவங்கியுள்ளது. பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு  'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டது. இடுக்கி, பத்தனம்திட்டா, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கும், நாளை ஆகஸ்ட் 14ஆம் தேதி இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

இன்று இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கும், நாளை திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், வயநாடு மாவட்டங்களுக்கும், ஆகஸ்ட் 15ல் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow