மதுபாட்டிலை வீசி பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள்.. 4 பேரை கைது செய்த போலீஸ்
மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 47 வயது பெண் கணவரை இழந்தவர். இவர் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் அந்த பெண் நேற்று தனது வீட்டருகே உள்ள பெண் தோழி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
சைதாப்பேட்டை ஆடு தொட்டி மேம்பாலம் அடையாறு ஆறு அருகே வரும் போது அங்கு மதுபோதையில் இருந்த நான்கு பேர் அந்த வழியாக சென்ற பெண்கள் மீது மதுபாட்டில், கட்டையை எடுத்து வீசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.
மேலும் படிக்க: சீமான் விவகாரம்.. அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது என கூறி நழுவிய வைரமுத்து
மேலும் அவர்கள் நான்கு பேரும் தங்களது ஆடையை கழற்றி பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டதால் பதறி போன பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், இது குறித்து அந்த 47 வயதான பெண் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மதுபோதையில் பெண்களை நோக்கி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சைதாப்பேட்டை சரஸ்வதி நகரைச் சேர்ந்த லெதர் கம்பெனியில் கூலி வேலை செய்து வரும் தனுஷ், வசந்த்குமார், சூர்யா மற்றும் கண்ணகி நகரை சேர்ந்த மேளம் அடிக்கும் வேலை செய்து வரும் விஷ்வா என்பது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட தனுஷ் மீது ஏற்கனவே சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும், வசந்த்குமார் மீது சண்டை உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
மேலும் படிக்க: அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது.. தயாரிப்பாளர் எஸ்.தாணு கொடுத்த மாஸ் அப்டேட்
இதனை அடுத்து போலீசார் நான்கு பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆபாச செய்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?