Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aug 26, 2024 - 13:09
Aug 26, 2024 - 14:24
 0
Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு...  எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி  உயரும்.. அன்புமணி அட்டாக்
தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

PMK Anbumani Ramadoss Condemn  Customs Duty in Tamil Nadu : நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்தாலும் அதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் தான் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களின் விதத்திற்கேற்ப கட்டணம் வசூலிக்கபடும். அதாவது கனரக வாகனம் என்றால் ஒரு கட்டணமும், இலகுரக வாகனம் என்றால் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, வாகனங்களுக்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்ந்து, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. 

2021ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும், 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், புதிதாக 19 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

மேலும் படிக்க: ரஜினிகாந்தால் திமுகவில் சுனாமி..தமிழிசை அட்டாக்

சுங்கக் கட்டண உயர்வு ஊர்தி வைத்திருப்பவர்களை மட்டும் தான் பாதிக்கிறது என்பது தவறான வாதம் ஆகும். சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படும். சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது அவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow