Actress Namitha : ”கோயில்ல நீ இந்துவானு சான்றிதழ் கேட்குறாங்க.. இப்படி நடந்ததே இல்ல..” நடிகை நமிதா ஆதங்கம்

Actress Namitha Visit at Madurai Meenakshi Amman Temple : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தன்னிடம் நீ இந்துதானா, சாதி சான்றிதழை காட்டு என கோயில் அதிகாரி கேட்டதாக நடிகை நமிதா பரபரப்பு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

Aug 26, 2024 - 12:48
Aug 26, 2024 - 14:19
 0
Actress Namitha : ”கோயில்ல நீ இந்துவானு சான்றிதழ் கேட்குறாங்க.. இப்படி நடந்ததே இல்ல..” நடிகை நமிதா ஆதங்கம்
Actress Namitha Visit at Madurai Meenakshi Amman Temple

Actress Namitha Visit at Madurai Meenakshi Amman Temple : தமிழ் சினிமாவில் 2000 காலக்கட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை நமிதா.  இவர் அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடிந்துள்ளார். பிறகு நடிப்பை நிறுத்திய அவர் பிக்பாஸில் பங்கேற்று சிறிது நெகடிவ் விமர்சனங்களையும் பெற்றார். 2017ம் ஆண்டில் வீரேந்திர சவுத்ரி என்பருடன் திருப்பதியில் இவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அழகாக இரட்டை குழந்தைகளும் பிறந்தது.  இவரும் இவரது கணவரும் கோயில்களுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி என்பதால் மதுரை மீனாட்சி அம்மனை பார்க்க இருவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த அதிகாரி ஒருவர் நமிதாவிடம் இந்து என சான்றிதழ் இருக்கிறதா என கேட்டு பிரச்சனை செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவில் இதுவரை இந்த கோயிலிலும் இதுபோல தன்னிடம் யாரும் கேட்டதில்லை எனவும் அவர் ஆதங்கப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து நடிகை நமிதா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,  ”அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு வணக்கம். இன்று நான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்காக மதுரை வந்திருந்தேன். காலையில் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட கோயிலுக்கு சென்றேன். ஆனா அங்க அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் அங்க நடந்தது. இதுவரை பல கோயில்களுக்கு நான் சென்றிருக்கிறேன், ஆனால் இதுவரை யாரும் என்னிடம் இப்படி பேசியதேயில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள உத்தரா என்ற அதிகராரி என்னையும் என்னுடைய கணவரையும் சேர்ந்து அசிங்கமாகவும், தவறாகவும் பேசிவிட்டார். மேலும் என்னிடம் அவர் நீங்கள் இந்து தானா? உங்களுடைய சாதி சான்றிதழை காண்பியுங்கள் என அவர் கேட்டார்.

இன்று வரை என்னை யாரும் அப்படி கேட்டதே இல்லை. ஏனென்றால் இந்தியாவில் இருக்கும் பலருக்கும் தெரியும் நமிதா இந்துவாக பிறந்தவர் என்று. என்னுடைய திருமணம் கூட திருப்பதியில் தான் நடந்தது. என்னுடைய மகன்களுக்கு கூட கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று தான் பெயர் சூட்டியுள்ளேன். இவ்வளவு பெரிய அதிகாரியாக இருப்பவருக்கு ஒரு பிரபலத்திடமோ அல்லது ஒரு நபரிடமோ எப்படி பேச வேண்டும் என தெரியவில்லை. இது சரி என எனக்கு தோன்றவில்லை. எனவே இச்சம்பவம் தொடர்பாக தக்க நடவடிக்கையை அமைச்சர் சேகர்பாபு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்”, என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பாலியல் புகாருக்கு மறுப்பு... குமுதம் செய்திகளுக்கு நடிகர் ரியாஸ் கான் பிரத்யேகப் பேட்டி

இந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தீயாக பரவ, பிரபலமானவர்களே கோயில்களில் இவ்வாறு நடத்தப்படும் போது, சாமானியர்கள் எப்படி ஒடுக்கப்படுவார்கள் எனவும் சமூகநீதி பேசும் திமுக அரசு இதுபோன்ற சம்பவங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow