அரசியல்

H Raja : தமிழிசை இல்லை; வெளிநாட்டில் அண்ணாமலை.. ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு..

Tamil Nadu BJP Committee Head H Raja : தமிழ்நாட்டில் ஹெச்.ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை, பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது.

H Raja : தமிழிசை இல்லை; வெளிநாட்டில் அண்ணாமலை.. ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு..
ஹெச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு

Tamil Nadu BJP Committee Head H Raja : தமிழக பாஜகவின் கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், கனகசபாபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்யும் என்றும், ஒவ்வொரு உறுப்பினரும், ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்து வழிநடத்துவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இடம்பெறாதது, பாஜகவினர் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத அரசியல் படிப்பு மேற்கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் பலரது புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது.