Baby Diya Songs : கண்களை சுழற்றி கந்தன் புகழ் பாடிய குழந்தை தியா.. ரசித்து பாராட்டிய சேகர்பாபு.. வாழ்த்திய சுகி சிவம்

Baby Diya Songs in Palani Murugan Maanadu 2024 : அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிறுமி தியா. கந்தன் பாடல்களை பாட பாட அனைவரும் மெய் மறந்து பாராட்டி ரசித்தனர்.

Aug 26, 2024 - 06:00
Aug 26, 2024 - 17:11
 0
Baby Diya Songs : கண்களை சுழற்றி கந்தன் புகழ் பாடிய குழந்தை தியா.. ரசித்து பாராட்டிய சேகர்பாபு.. வாழ்த்திய சுகி சிவம்
Baby Diya Songs in Palani Muthamizh Murugan Maanadu 2024

Baby Diya Songs in Palani Murugan Maanadu 2024 : தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.  மாநாட்டில் கலந்துகொண்டு முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சென்னையைச் சேர்ந்த 7வயது சிறுமி தியா. குழந்தை தியாவின் பாடல் பொதுமக்களையும், முருக பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது.

குழந்தை தியா பாடும் போது அவரது கண்களும் சேர்ந்து பாடியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தன்னை மறந்து கை தட்டி ரசித்து சிரித்தார். தியாவை பாராட்டும் அனைவரும் குட்டி தேச மங்கயர்கரசி என்று சொல்வார்கள். முத்தமிழ் முருகன் மாநாட்டில் தியா பாடி முடித்த உடன் தேச மங்கயர்கரசி, சுகிசிவம் ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர். இது முருகப்பெருமாள் தனக்கு கிடைத்தது என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார் பேபி தியா. 

பெரிய பெரிய ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பங்கேற்ற மேடையில், தனக்கும் ஒரு வாய்ப்பளித்த, முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி என தெரிவித்தார் தியா.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளில் தியா எனும் குழந்தை மக்களிடத்திலும், சமூக வலைதளங்களிலும் திருப்புகழ் தியா என்றும் குட்டி கே.பி.சுந்தராம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள்..!

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தியாவிற்கு ஏழு வயது ஆகுகிறது. இவள் பாட்டுப் பாடியதைக் கேட்கும் போதும் அல்லது மேடையில் பாடும் போதும் கேட்கும் அனைவருக்கும் மனம் மெலிதாக தித்திக்கிறது.

ஆன்மிகம் கலந்த கணீர் குரல், மழலைத்தனமான முகபாவங்கள், உடல் மொழி அனைத்தும் ரசிக்க வைக்கிறது. மூன்று வயதிலிருந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறாள். முதல் மேடை ஐந்து வயதில் ஆரம்பித்தது. முதல் கச்சேரி மதுரை பூங்கா முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாகத்தன்று தொடங்கியது.

திருப்புகழ், அறுபடைவீடு, முருகன் பாடல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி என்று மனம் விரும்பி பாடிக்கொண்டு வருகிறாள். பல்வேறு திருக்கோவில்களில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியிருக்கிறாள்.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி முருகன் கோவில், பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் மட்டும் ஐந்து முறை இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறாள். மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் திருக்கோயில் உள்பட பட்டியல் நீள்கிறது.

தியாவிற்கு பழைய பக்தி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கே.பி. சுந்தராம்பாள், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்கள் பாடிய பல பாடல்களை மேடைகளில் பாடியுள்ளார் அதனாலே பலரும் “..குட்டி கே.பி.சுந்தராம்பாள்..” என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். 

தியா, மேடைகளில் பாடல்கள் மட்டுமல்லாது பாடல்கள் பாடும் பொழுது, அப்பாடல்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்,  திருப்புகழ் கந்தர் அலங்காரம் பற்றிய விளக்கக் கதைகள் கூறிப் பாடுவது தியாவின் தனிச்சிறப்புகளாகும்.

திருக்கோவில்களில் மட்டுமல்லாது, ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சிகள் மதுரை, சென்னை, சேலம் கோயம்புத்தூர், நாகர்கோவில் போன்ற பல ஊர்களில் நடக்கும் போதும், முக்கிய நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் கலந்து கொண்டு தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் குழந்தை தியாவின் பாடலை அனைவரும் மெய்மறந்து கேட்டு ரசித்து பாராட்டினர். 

இசை நிகழ்ச்சிகளில் பலபெரியவர்கள் ஆனந்தக் கண்ணீரோடு தியாவிற்கு ஆசீர்வாதம் செய்து வாழ்த்துகின்றனர். ஏழு வயதில் இறைவன் புகழ்பாடி, மக்களை மகிழ்வித்து, நற்பணியாற்றுகிறார் தியா. நாமும் வாழ்துவோம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow