2025ல் நெக்ஸ்ட் தேர்வு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு..பயிற்சி மருத்துவர்களுக்கு சிக்கலா?

நடப்பு கல்வியாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு எதிர்ப்புகள் வந்ததால் இந்த முடிவை மத்திய அரசு ஒத்திவைத்தது இதனை தொடர்ந்து இந்த ஆண்டு Next தேர்வு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Sep 2, 2024 - 10:19
Sep 2, 2024 - 18:04
 0
2025ல் நெக்ஸ்ட் தேர்வு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு..பயிற்சி மருத்துவர்களுக்கு சிக்கலா?
next exam 2025

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து அறிவித்தது. அதாவது எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் NEXT-1 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும்.


எம்பிபிஎஸ் படிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  என்எம்சி வெளியிட்டுள்ளதில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டில் முடித்த பின்  நெக்ஸ்ட் 1 தேர்வு நடத்தப்படும் அதில் தேர்ச்சி பெற்றால் தான் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணி புரிய முடியும் என்றும், அதன் பின்னர் முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக  நெக்ஸ்ட் -2 தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து அறிவித்தது. அதாவது எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் NEXT-1 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும்.அதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிறகு நெக்ஸ்ட்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளை ஆற்றவும் முடியும்.  

அதேபோன்று வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் இந்தியாவில் மருத்துவ சேவையாற்றவும் அத்தேர்வு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த தேர்வு முறையால் மாணவர்களின் பயிற்சி திறன் பாதிக்கப்படும் எனக் கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்த சூழலில், அத்தேர்வு நடைமுறை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது நிகழ் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் பாடத் திட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அந்த வகையில், எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருத்தல் அவசியம். 

தற்போது தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு ஆண்டுகளிலும் மருத்துவ மாணவர்களுக்கு என்னென்ன பாடங்களை நடத்த வேண்டும் என்கின்ற பாடத்திட்ட மாற்றத்தையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow