Mrs and Miss world Universe 2024 : அழகிப் போட்டிகளில் போட்டிப்போட்டு வெல்லும் அம்மா - மகள்!

Mother and Daughter Win Mrs and Miss world Universe Title 2024 : திருமதி உலக அழகி போட்டியில் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் வென்ற நிலையில், தற்போது அவரது மகள் சரிஹா சவுத்ரி மிஸ் வேர்ல்ட் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றிவாகை சூடி அசத்தியுள்ளார்.

Aug 6, 2024 - 07:10
Aug 6, 2024 - 15:45
 0
Mrs and Miss world Universe 2024 : அழகிப் போட்டிகளில் போட்டிப்போட்டு வெல்லும் அம்மா - மகள்!
அழகிப்போட்டிகளில் போட்டிப்போட்டு வெல்லும் அம்மா - மகள்

யார் இந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி? 

Mother and Daughter Win Mrs and Miss world Universe Title 2024 : சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய். அம்மாவாகிவிட்டாலே வேலைக்கு செல்வதை கூட விட வேண்டிய நிலையில் உள்ள பெண்களுக்கு மத்தியில் பிளாரன்ஸ் அழகுத்துறையில் சாதனை படைக்க ஆரம்பித்தார். எளிய குடும்பத்தில் பிறந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக ஆளுமை கொண்டவர்.

அழகி போட்டிகளில் சாதனை: 

2021ம் ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார். இதோடு டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. 

இந்த பட்டத்தை அவர் எளிதாக வென்றிடவில்லை. 2021ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. கொரோனாவினாலும், நிமோனியா காய்ச்சலாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ், மரண வாயிலை தொட்டு விட்டு திரும்பினார். 

எனினும், அவரது கணவரும், மகள்களும் தந்த ஊக்கம் மற்றும் தன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் கொடிய நோயையும் எதிர்த்து போரிட்டு மீண்டு வந்தார். அதன்பின்னரே நடனம், உடற்பயிற்சி, நீச்சல், யோகா என திருமதி அழகி போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்தி பட்டத்தை வென்று அசத்தினார். தனது திறமையை உலகமே அறிந்திட கடல் கடந்து பயணித்தார்.

2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். இதில் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றார். தற்போது அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் ‘Spirit of World Universe' and ‘Mrs International World People Choice' ஆகிய பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வெற்றி வேண்டும் என்றால் வலியை அனுபவிக்க வேண்டும். இந்தப் போட்டிகளுக்காக தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, தியானம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, மரணப் படுக்கைக்குச் சென்றுவிட்டேன். அப்போது என்னை உயிர்ப்புடன் வைத்தது யோகாவும், நம்பிக்கையும்தான். போட்டிக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகிய இரண்டுக்கும் உடலைப் பராமரிப்பது அவசியம்” என்றார். 

படிப்பு, சாதனைகள்: 

Life Science, Public Administration, MBA Marketing and HR, MSc Psychology, MA English Literature, Doctor of Public Administration, Doctor of Philosophy என எண்ணற்ற படிப்புகளை முடித்த இவர், உளவியலில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கியுள்ளார். Life Skill பயிற்சியாளர், யோகா பயிற்சியாளர் என இவரின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. Women Face of the year, Fox Story-ன் 50 ஆளுமை செலுத்தும் பெண்கள் விருது, சுகாதாரத்துறையில் ஈடுபடும் 50 பெண்கள் விருது, ஃபெமினாவின் தென் இந்திய பெண் விருது, சிறந்த கல்வியாளர், உளவியலாளர், தொழில் வல்லுநர், மாற்றத்தை விதைப்பவர், சிறந்த பெண் தொழில் வல்லுநர், அழகும், அறிவும் கொண்ட பெண் விருது, கெளரவ் புரஸ்கார் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

சமூக சேவைகள்: 

இப்படி வரிசையாக அழகி போட்டிகளில் பட்டங்களைக் குவித்த டாக்டர் பிளாரன்ஸ் வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, மனதளவிலும் தான் மிகவும் அழகானவர் என்பதை தனது சேவைகள் மூலமாக நிரூபித்து வருகிறார். மிகவும் பின் தங்கிய கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், ‘வூமன் எம்பவர்மென்ட்’ (Women empowerment) அமைப்பின் தமிழகத்திற்கான தலைவராக உள்ளார். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருக்கும் பெண்கள் முன்னேறுவதற்கான தொழிற்சார்ந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறார். 

மகள் சரிஹா செளத்ரி: 

தற்போது இளம் பெண்களுக்கு அழகி போட்டிகளில் பங்கேற்பதற்கான ஸ்டார்ட்டிங் டு எண்ட் பயிற்சிகளை வழங்குவது, பயிற்சியாளராக செயல்படுவது என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி 8 அடி பாய்கிறார் என்றார், அவரது மகளான சரிஹா சௌத்ரியும், தொழில் முனைவோர், ட்ராவலர், மனோதத்துவ நிபுணர் என கலக்கி வருகிறார். 

சரிஹா செளத்ரி, சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றவர். அதனையடுத்து சென்னையில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட்  சென்டர் பார் கவுன்சிலிங் டிப்ளமோ பட்டம் பெற்றார். அதன் பின்னர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைக்கோட்ராமாவில், சைக்கோட்ராமா பயிற்சிப் பட்டறைகள் மூலம் தனது தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தியவர், பெங்களூரில் உள்ள என்எல்பி கோச்சிங் அகாடமியில் இணைந்ததன் மூலமாக 16 வயதிலேயே மிகச்சிறந்த நரம்பியல்-மொழியியல் பயிற்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார். 

ஒரு இளம் ஆற்றல்மிக்க தொழில்முனைவோராகவும் வலம் வரும் சரிஹா,  2022 ஆம் ஆண்டு முதல் ஆழ்வார்பேட்டை மற்றும் டிரிப்ளிகேனில் உள்ள லிட்டில் மில்லினியத்தின் பங்குதாரராக உள்ளார். ஷ்ரேயாவின் குளோபல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார், இது முழுமையான ஆளுமை திறன் பயிற்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மதிப்பிற்குரிய அமைப்பாகும். அவரது தலைமையின் கீழ், இந்த அகாடமி, குழந்தைகளுக்கான சர்வதேச பேஷன் வீக் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இதுமட்டுமின்றி ட்ரவலராக ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சுற்றிப்பார்த்துள்ளார். 

சமீபத்தில், சரிஹா வேல்ட் யுனிவர்சல் புரொடக்ஷன் சார்பில் அமெரிக்காவில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று,  “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல்” என்ற பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் போட்டியிட்டுள்ளார். கூடுதலாக, ஸ்டார் ஐகான் ஆஃப் இந்தியா விருதுகளின் 7வது பதிப்பில் "யுனிவர்சல் ஸ்டைல் ​​திவா" விருதையும் வென்றுள்ளார். 

மேலும் படிக்க: அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணியில் ஏகே 64

அழகி போட்டியில் வென்றது குறித்து சரிஹா செளத்ரி கூறுகையில், “கொரோனாவில் இருந்து மீண்டு  வந்த அம்மா கடுமையாக முயற்சி செய்து அழகி போட்டிக்கு தயாரானார். நடனம், உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்தார். இதற்கு அவருடைய உடல் உறுதியை விட மன உறுதி மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதுதான் என்னையும் அம்மாவைப் போல அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையைக் கொடுத்தது” என்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow